Skip to main content

Posts

Showing posts from 2020

மனிதனுடைய கர்மாவை மூன்று விதமாக பிரிக்கலாம்..?

  1:சரி செய்யக்கூடிய கர்மா 2:அனுபவித்துக் கழிக்க வேண்டிய கர்மா 3:கர்மா அழிந்தும் அழியாத கர்மா வளரும் குறையும் மனிதப் பிறவி எடுப்பதே கர்மாவை கழிக்கத்தான். தோஷத்தை ஏற்படுத்துவது திரிகோனாதிபதி1,5,9 அதை செயல்படுத்துவது கேந்திரம் 1,4,7,10.பின் விளைவை உண்டு பண்ணுவது 6,8,12 பொதுவாக தீராத கோபமும் பேராசைகளும் கர்மாவிற்கு வழிவகுக்கும். தோஷத்திற்குண்டான கிரகநிலைகள் 1ஒரு பாவ அதிபதியும் பாதகாதிபதியும் சேர்ந்து இருப்பது. 2ஒரு பாவ அதிபதியுடன் அஷ்டமாதிபதி சேர்ந்திருப்பது. ஒரு பாவ அதிபதியுடன் ராகு கேது சேர்ந்து இருப்பது. ஒரு பாவ அதிபதியுடன் அஷ்டமாதிபதியும் ராகுவும் சேர்ந்து இருப்பது. இதில் லக்னாதிபதி சம்பந்தப்பட்டால் ஜாதகருக்கு. அதேபோல் எந்த பாவாதிபதி சம்பந்தப்படுகிறது அந்தப் பாவக காரக உறவுகளுக்கு தோசத்தை ஏற்படுத்துகிறது. பிதுர் தோஷம்:இது தலைமுறைகளைப் பாதிக்கும் கடுமையாக உழைத்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது ஜாதகர் தந்தை-மகன் மூவரும் கஷ்டப்பட்டால் பிதுர் சாபம் வேலை செய்கிறது என்று அர்த்தம். இதற்கு குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்து கொள்ளலாம். மாதுர் சாபம்:இது நாலாம் இடத்தை சேர்ந...

ஜோதிட உலகத்தில் இருக்கும் "வக்ர கிரகங்கள்" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்..?

  தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.. ★"வக்ர கிரகங்கள்" என்பது நமது ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 5,6,7,8 பாவங்களில் "செவ்வாய், சனி, குரு"இந்த கிரகங்கள் இருந்தால் வக்ரமாக கருதப்படுகிறது. ★சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் 40 டிகிரி இடைவெளி இருந்தால் சுக்கிரன் வக்கரமாகவும், ★சூரியனுக்கும் புதனுக்கும் இடையில் 17 டிகிரி இடைவெளி இருந்தால் புதன் வக்கிரமாகவும் கருதப்படுகிறது. ★வக்கிரமான கிரகங்கள் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயத்தில் நமக்கு விசித்திரமான, வித்தியாசமான, மாற்று சிந்தனை உடைய, நடைமுறைக்கு ஒத்துவராத, வழக்கத்திற்கு மாறான முறையில் நம் மனதில் தோற்றுவிக்கும் மற்றும் நம்மை வழி நடத்தும். ★உதாரணமாக 4ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் வீடு வண்டி, வாகனம், சொத்து, property போன்றவற்றில் நம்மை விசித்திரமாக,வித்தியாசமாக, மாற்று சிந்தனை உடையதாக நம்மை வழி நடத்தும். ★10ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் விசித்திரமான தொழில் வித்தியாசமான தொழில் மாற்று சிந்தனை உடைய தொழில், எல்லோரும் ஒரு மாதிரி தொழில் செய்தால் இவர் அதற்கு நேர்மாறாக ...

"புத்திர தோஷம் என்றால் என்ன?"

  புத்திர தோஷம் என்பது திருமணம் ஆகி ஓரிரு ஆண்டுகளுக்குள் குழந்தை பாக்கியம் ஏற்படாவிட்டால், ஜோதிடரை சந்தித்து பலன் கேட்கும்பொழுது ஜோதிடர் ஜாதகத்தை ஆய்வு செய்து விட்டு அவர் சொல்லும் முதல் வார்த்தை உங்களுக்கு புத்திர தோஷம் உள்ளது என்பர். குழந்தை இல்லாமல் போவது மட்டும் புத்திர தோஷம் அல்ல, பிள்ளைகளால் வேறு எந்த பிரச்சனை இருந்தாலும் புத்திர தோஷமே. "புத்திர தோஷத்தின் வகைகள்" தாமதமாக குழந்தை பிறப்பது, கரு உண்டாகி அடிக்கடி கலைந்து போவது, குழந்தை பிறந்தவுடன் இறந்து போவது, உடல் ஊனமான குழந்தைகள் பிறப்பது, மன வளர்ச்சி குறைந்த நிலையில் பிறப்பது, காது கேளாமை, வாய் பேசாமை, பார்வைக்குறைபாடு பிறந்தபின் சிலர் தீராத வியாதிகளால் பாதிக்கப்படுவது, ஏதாவது ஒரு நோய் விபத்துகளில் சிக்கி ஏதாவது ஒரு உறுப்பை இழப்பது, பிள்ளைகள் பெற்றோரின் பேச்சைக் கேட்காமல், பெற்றோர் கண் முன்னே கடன், மற்றும் வேறு பிரச்சினைகளால் பிள்ளைகள் அவதிப்படுவது,மற்றும் சட்டத்திற்குப் புறம்பான செயல்களை செய்து கொலை கற்பழிப்பு போன்ற குற்றச்செயல்களில் சிக்கி தன் கண்முன்னே ஜெயிலில் அடைத்து சித்திரவதை படுவதும் புத்திரதோஷமே. இதை ஜாதகத்தில் ...

ஜோதிட உலகத்தில் இருக்கும் "பாதகாதிபதி" பற்றிய சில முக்கியமான தகவல்கள். (தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்)

★பாரம்பரிய ஜோதிடத்திலும் வேதஜோதிடதிலும் "பாதகாதிபதி" பற்றிய சில முரண்பட்ட தகவல்கள் இருக்கின்றன. ★உண்மையில் பாதகாதிபதி யார் நமது ஜாதகத்தில் பாதகாதிபதி மூலம் என்ன விதமான பிரச்சினைகள் நமக்கு வரும் என்பதை பார்க்கலாம். ★சர லக்னம், சிர லக்னம் உபய லக்னம்,இந்த மூன்று லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பாதகாதிபதி வேறுபடுகிறது.அவற்றை கடைசியில் படத்தில் காண்பித்திருக்கிறேன். பார்த்துக்கொள்ளவும். 1.சரலக்னங்கள், 2.பாதகஸ்தானம் 3.பாதகாதிபதி ★மேஷம் கும்பம் சனி ★கடகம் ரிஷபம் சுக்கிரன் ★துலாம் சிம்மம் சூரியன் ★மகரம் விருச்சிகம் செவ்வாய் 1.சிர லக்னங்கள் 2.பாதகஸ்தானம் 3.பாதகாதிபதி ★ரிஷபம் மகரம் சனி ★சிம்மம் மேஷம் செவ்வாய் ★விருச்சிகம் கடகம் சந்திரன் ★கும்பம் ரிஷபம் சுக்கிரன் 1.உபய லக்னங்கள் 2.பாதகஸ்தானம் 3.பாதகாதிபதி ★மிதுனம் தனுசு. குரு ★கன்னி மீனம். குரு ★தனுசு மிதுனம் புதன் ★மீனம் கன்னி புத...

உங்களுக்கு தெரியுமா மங்கள வடிவமானவன் - கருடன்..!

  மங்கள வடிவமானவன். பறவைகளின் அரசன். கருடனைத் தரிசிப்பது சுபசகுனம். ஆகாயத்தில் கருடன் வட்டமிடுவதோ, குரலெழுப்புவதோ நல்லதொரு அறிகுறி. இன்றளவும் கும்பாபிஷேகத்தின்போது எத்தனை விதமான பூஜைகள், யாகங்கள் நடந்தாலும் பூஜையின்போது கருடன் வந்து தரிசனம் தந்தால்தான் கும்பாபிஷேகமே முழுமை பெறுகிறது. கருடனைத் தரிசிக்கும்போது நம் மனம் நிறைவடைகிறது. ஸ்ரீமந் நாராயணன் எத்தனை விதமான வாகனத்தில் தரிசனம் தந்தாலும் கருட வாகனத்தில் தரிசனம் தருவது தனிச்சிறப்பு. கருடன், கச்யபர் - விநதை தம்பதிக்கு இரண்டாவது மகனாவார். ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். கருடாழ்வார், மங்களாலயன், பக்ஷிராஜன், சுபர்ணன், புஷ்பப்பிரியன், வினதைச் சிறுவன், வேதஸ்வரூபன், வைனதேயன் போன்ற எண்ணற்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவருக்கு ருத்ரை மற்றும் சுகீர்த்தி என்னும் இரண்டு மனைவியர் உள்ளனர். கருடாழ்வார், மகா பலம் உடையவர். அழகான முகம், உறுதியான நகங்களை உடையவர். கூர்மையான கண்கள், பருத்த கழுத்து, குட்டையான கால்கள் மற்றும் பெரிய தலையையும் பெற்றவர். அனைத்து திசைகளிலும் வேகமாகவும், உயரமாகவும் பறக்கும் ஆற்றலைக் கொண்டவர். சர்ப்பங்களைக்கூட ...

விஷத்தை குணப்படுத்தும் தன்மை கொண்ட வசம்பு ..?

   குழந்தைகளுக்கான அருமருந்து வசம்பு. விஷம் குடித்தவரும் பிழைத்துக்கொள்ளும் தன்மையை கொண்டது வசம்பு. நமது முன்னோர்கள் வசம்பை வீட்டில் கட்டாயம் வைத்திருந்த நிலையில், பிறந்த பச்சிளம் குழந்தைகளின் வாயில் சிறிதளவு உரசி வைப்பார்கள். வசம்பை பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உபயோகம் செய்யலாம். வசம்பு எப்படிப்பட்ட விஷத்தையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது. வசம்பை தூளாக்கி இரண்டு தே.கரண்டி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் அனைத்துவகையான தொற்று நோய்களும் சரியாகும்.  விஷம் அருந்திய நபர்களுக்கு, உடனடியாக வசம்பை இரண்டு தேக்கரண்டியில் இருந்து மூன்று தேக்கரண்டி கொடுத்தால், உடலில் உள்ள விஷம் முழுவதுமாக  வெளியேறிவிடும்.  வசம்பு கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்கிறது. பசியினை தூண்டி சோம்பலை சரிசெய்கிறது. இன்றளவும் காய்ந்த வசம்பை பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.  வசம்பிற்கு பிள்ளை வளர்ப்பான் என்ற பெயரும் உண்டு. ஏனெனில் குழந்தைகளுக்கு பசியின்மை மற்றும் நோய்தொற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. வசம்பு பாரம்பரியமாக நாம் பயன்பட...

பூக்கள் காட்டும் சகுனம்..?

சகுனத்தை அறிவதிலும் புஷ்பம் பயன்படுகிறது. சுவாமிக்கு அணிவிப்பதற்காக எதிரில் ஒருவர் மாலை கொண்டு வந்தால் - அது காரிய சித்தி - சுப சகுனம். மனிதர்களுக்கு போடுவதற்காக பூ மாலை ஏந்தி ஒருவர் எதிர் வந்தால், பணத்தினால்தான் காரியசித்தி என்பதனை அறியலாம். மகான்களுக்கு அணிவிக்க எதிரில் மாலையுடன் வந்தால், கடன் தொல்லை தீரும், பிறவி கடன், திருமணக் கடன் கூடத் தீர்ந்து விடும். பிரேதத்திற்கு அணிவிக்க மாலையுடன் எதிர் வந்தால் கெட்ட சகுனம், காரிய தடங்கல். அன்று வெளியில் செல்லலாகாது. பூக்களிடம் இருந்து அறிய வேண்டியன: மல்லிகை தான் இருக்கும் இடத்தை சுகந்த நறுமணத்துடன் வைத்து கொள்ளும். பூலோகத்தில் மல்லிகைப் பூ இருந்தாலும், அதற்கான நறுமணம் யாவும் விண்ணுலகப் புஷ்ப லோகத்தில் இருந்துதான் வந்து கொண்டிருக்கும். மல்லிகையைப் போலவே மனிதர்களும் தாங்கள் இருக்கும் இடத்தை எப்போதும் பூக்கள், ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம் போன்றவற்றுடன் நல்வாசனையுடன் வைத்துக் கொள்ள வேண்டும். துர்மணம் இருக்க கூடாது. இதன் காரணமாய்த்தான் மானுடர்கள் தலையிலோ, காதிலோ, பையிலோ, கையிலோ எப்போதும் மலர்களை வைத்திருக்கும் புனித பண்பாடு ஏற்பட்டது. யார் வந்த...

அடிக்கடி மருதாணி வைத்துக்கொள்வதால் இத்தனை நன்மைகள் உண்டா...?

  மருதாணி வைப்பது வெறும் அழகிற்காக மட்டும் இல்லை. மருதாணி வைப்பதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அதனால் தான் நம் முன்னோர்கள் ஒவ்வொரு விசேஷத்திற்கும் மருதாணி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். மருதாணி வைப்பதால் சொறி மற்றும் சிரங்கு போன்ற தொற்றுக்கள் பரவாமல் தடுக்கலாம். மருதாணி வைப்பதால் நகத்தின் இடுக்கில் சேரும் அழுக்கில் உள்ள விஷக்கிருமிகளை அளிக்கிறது. மருதா‌ணி இலையை அரை‌த்து கைககளு‌க்கு வை‌த்து வர, உட‌ல் வெ‌ப்ப‌ம் த‌ணியு‌ம். கைகளு‌க்கு அடி‌க்கடி மருதா‌ணி போ‌ட்டு வர மனநோ‌ய் ஏ‌ற்படுவது குறையு‌ம். கையில் மருதாணி வைப்பதால் உடலில் உள்ள வெப்பத்தை தனித்து உடல் சூட்டை தணிக்கிறது. மருதாணியை நாம் கால்களில் ஏற்படும் வெடிப்புகளில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பும் மறையும். முடி உதிர்தல், இளநரை, வழுக்கை, முடி அடர்த்தியாக வளர, மருதாணியை அரைத்து தலைக்கு குளிக்கும் முன் தலையில் தேய்த்து மசாஜ் செய்து 1 மணி நேரம் ஊறவைத்து பின் குளித்தால் முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். சிலரு‌க்கு மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ண்டா‌ல் ச‌ளி ‌பிடி‌த்து ‌விடு‌ம். இத‌ற்கு மருதா‌ணி இலைகளை அரை...

கேரட் ஜூஸில் இருக்கும் சத்துக்கள் ..?

  கேரட் ஜூஸில் இருக்கும் சத்துக்கள் : கேரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருளும் உள்ளது. வைட்டமின் ஏ சத்து கல்லீரலுக்கு மிகவும் சிறந்தது. கேரட், கேரட் ஜூஸ் சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும். மேலும் கேரட்டினை மென்று சாப்பிட்டும் பொது பற்களின் கரைகள் போய்விடுகிறது. கேரட் ஜூஸ் தினமும் பருகி வந்தால் கண்பார்வை மேம்படும். கண்புரை நோய் ஏற்படுவது தடுக்கப்படும். தினமும் கேரட்டினை சாப்பிட்டால் மாலைக்கண்நோய் எளிதில் குணமடையும். தினந்தோறும் கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு எலும்புகள் வலுவடைந்து, அதன் உறுதித்தன்மையும் அதிகரிக்கும். மேலும் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத நோய் வராது. தினமும் கேரட்டினை சாப்பிட்டால் கரோட்டின் என்கின்ற உயரிய சத்து புற்று நோய் செல்களை கட்டுப்படுத்துகின்றன. தினமும் கேரட்டினை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது. மேலும் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்தியை தருகின்றது. நமது உடலில் இருக்கும் கல்லீரல் உணவுகளில் இருக்கும் விஷத்தன்மைகளை முறித்து, உடலுக்கு நன்மையை செய்கிறது. தினமும் கே...

கோவிலில் உள்ள கொடி மரம் உணர்த்தும் தத்துவம் என்ன...?

  கொடி மரம் துவஜஸ்தம்பம் என்று அழைக்கப்படும் ஆலய கொடி மரமும் மிகப்பெரிய தத்துவங்களை தன்னுள் கொண்டுள்ளது. கோயிலுக்கு அழகு தருவது கொடிமரம். தீய சக்திகளை அகற்றுவதன் பொருட்டும், இறை ஆற்றலை அதிகரித்தல் பொருட்டும், கோயிலையும் பக்தர்களையும் பாதுகாத்தற் பொருட்டும் ஆலயங்களுக்கு முன்பாக கொடிமரம் நிறுவப்படுகிறது. கொடி மரத்தின் தண்டு சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களில் செய்வது உத்தமம் ஆகும். பலா, மா ஆகிய மரங்களில் கொடிமரம் அமைப்பது குறைந்த நன்மையைத் தருவதால் மத்திமம் ஆகும். கமுகு, பனை, தெங்கு முதலிய மரங்களில் கொடி மரம் அமைப்பது மிகமிகக் குறைந்த நன்மையளிக்குமாதலால் இவை அதமம் ஆகும். கொடி மரம் முப்பத்து மூன்று கணுக்கள் உள்ளதாய் அமைப்பது மிகவும் சிறப்பாகும். கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே சமயத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும். அதுபோல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைக்க வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன. கொடிக்கம்பத்தின் ஐந்தில் ஒரு பாகம் பூமியிலிருக்கும்படி நடுவர்...

செல்வம் பெருகி நிலைக்க கூறப்பட்டுள்ள சில ரகசியங்கள் !!

  செல்வம் பெருகி நிலைக்க கூறப்பட்டுள்ள சில ரகசியங்கள் !! இலவங்கப் பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும். பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும். நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும். ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். (சுழற்சி சக்தி உண்டாகி செல்வமானது பெருகி தங்கும்). தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி - அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும். முக்கியமான காரியங்கள், பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்" என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும். மாதச்சம்பளமாகட்டும், சுயத்தொழில், வியாபாரம் ச...
அனைத்து பாகங்களும் அற்புத பயன்கள் நிறைந்த சங்குப்பூ !! சங்குப்பூ கொடியாக வளரும். இயலுபுடையது. அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப் படுகின்றது. தட்டையான காய்களையுடையது. பொதுவாக மருத்துவத்திற்கு வெண்ணிறப் பூக்களையே பயன்படுத்துகின்றனர். இதன் இலை, வேர் மற்றும் விதை முதலியவை மருத்துவகுணம் கொண்டவை. இது புளிப்புச்சுவை கொண்டதாக இருக்கும். இது சிறுநீர் பெருக்கும், குடற்பூச்சிகளை கொல்லும். தாது வெப்பு அகற்றும். வாந்தி, பேதி, தும்மல் ஆகியவற்றை குணப்படுத்தும். இரத்த குழாய் அடைப்பு நீங்கும். அழகுக்காக வளர்க்கப்படும் சங்குப்பூக்கள், இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைக் குணமாக்கும். சங்குப்பூக்களை பறித்து தண்ணீரில் 24 மணிநேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்துவர இரத்தக்குழாயில் உள்ள அடைப்பு நீங்கும். நெறிக்கட்டிகள் வீங்கி இருக்கும்போது சங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்து வர வியர்வை நீங்கும். ஊதா நிற சங்குப்பூவின் வேரை பாலில் வேகவைத்து உலர்த்தி பாதியளவு சுக்குடன் பொடித்து காலை மாலை 2 சிட்டிகை வெந்நீருடன் கொள்ள வாத நோய், வாயுவலி, சீதளம் நீங்கும். இச்சூரண...