Skip to main content

ஜோதிட உலகத்தில் இருக்கும் "ராகு கேது" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்.


 







★இந்த ஜகத்தை ஆளக் கூடிய சக்தி படைத்தவர்கள் ராகு-கேது பகவான்கள்.

★ராகு கேது நிழல் கிரகங்கள் கிடையாது நிழல் கதிர்கள்.
★ராகு பகவான் கரு நாகப்பாம்பு,கேது பகவான் செம்பாம்பு, செம் பாம்பே உன்னை சிரம் தாழ்த்தி பணிகிறேன் என்று கேதுவிற்கு ஒரு ஸ்லோகமே உள்ளது.
★பரிபூரண சூரியகிரகணம் ராகு,பரி பூர்ண சந்திர கிரகணம் கேது,
★பரிபூர்ண அமாவாசை ராகு, பரி பூரண பௌர்ணமி கேது,
★சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் தான் ராகுவும், கேதுவும்
★ஒரு சூரிய கிரகணதிற்கும், சந்திர கிரகணதிற்கும் இடையிலுள்ள இடைவெளி காலம் தான் ராகு கேது பெயர்ச்சியே.
★அந்த ஒன்றரை வருட ராகு கேது பெயர்ச்சி காலம் வேறொன்றும் கிடையாது ஒரு சூரிய கிரகணத்திற்கும் அடுத்த சூரிய கிரகணத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி காலம் தான் ராகு கேது பெயர்ச்சியே,
★அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் ஒரு மாதத்தை எப்படி கணக்கில் எடுத்து கொண்டார்கள் என்றால்,ஒரு அமாவாசைக்கும் அடுத்த அமாவாசைக்கும் இடையிலுள்ள இடைவெளி காலம் தான் ஒரு மாதமாக கணக்கில் எடுத்துக் கொண்டார்கள்.
★ராகு வைரஸை பரப்பும் கூடிய வைரஸ்,மிருதன் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் போல,வைரஸை பரப்ப கூடிய வைரஸ்.
★கேது வைரஸை அழிக்க கூடிய வைரஸ் அதாவது நாயகன் சினிமாவில் வரும் கமலஹாசன் போல Negativeஐ அழிக்கக்கூடிய Nagative.
★ராகு அமானுஷ்ய விஷயங்களுக்கு அதிபதி பில்லி ,சூனியம், ஏவல் மாந்திரீகம், செய்வினை,போன்ற விஷயங்கள் ராகு பகவானின் காரகத்துவம்.
★ஏன் பில்லி,சூனியம் ,ஏவல்,
மாந்திரீகம், செய்வினை செய்பவர்கள் எல்லாம் அம்மாவாசையில் செய்கிறார்கள் ஏனென்றால் அம்மாவாசை தான் ராகு.
★ஏனென்றால் அம்மாவாசையில் தான் பூமிக்கு ராகுவின் கதிர்கள் வந்து விழும்.அதனால் தான் பில்லி சூனியம் ஏவல் செய்வினை செய்வார்கள் ராகுவின் நாளிலேயே செய்கிறார்கள்.
★கேது யாகத்திற்கு அதிபதி ஆன்மீகத்திற்கு காரணமான கிரகம்.அதனால் தான் பௌர்ணமி நாளில் கடவுள்களுக்கு சிறப்பு பிரார்த்தனைகளும் யாகங்களும் மூலிகை செடிகள் அல்லது மூலிகை பொருட்கள் பரிக்க செல்வதும் செய்கிறார்கள்.
★பௌர்ணமி நாளில் கேதுவின் கதிர்வீச்சு பூமிக்கு அதிகமாக வந்து விழும்.அப்பொழுதுதான் சிறப்பு யாகங்களை நடத்துவார்கள்.
★ராகு நம்முடைய மூதாதையர்கள் அதனால்தான் நம்முடைய மூதாதையர்களுக்கு அமாவாசையில் திதி கொடுக்கிறோம் அமாவாசையே ராகு பகவான் தான்.
★ராகு தீராத ஆசையுடன் இறந்து போன பிரேத ஆத்மாக்கள் அல்லது ஆவிகள் அதனால்தான் அம்மாவாசையில் இரவு நேரத்தில் யாரும் வெளியே வரக்கூடாது என்று சொல்வது.
★நமது உடலில் தீராத ஆசையுடன் உயிர் இருந்தால் அது ராகு.உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால் அது கேது.
★கேது தான் முக்திக்கு அதிபதி.நம் உடலைவிட்டு உயிர் பிரிந்தவுடன் நமக்கு முக்தியா அல்லது மறுபிறவியா என்பதை சொல்பவரே கேது பகவான் தான்.
★கேது தோஷம் என்று ஒன்று கிடையவே கிடையாது 8 அஷ்ட கர்மங்கள் தான் ஜோதிடத்தில் உள்ளது.
★கேது தோஷம் ஆகிவிட்டால் ஒரு மனிதனுக்கு இறப்பும் கிடையாது பிறப்பும் கிடையாது.
★ராகு தீராத ஆசையை உடையவன் கேது தீராத கடமை உள்ளவன்.ராகு போன ஜென்மத்தில் நமக்கு தீராத ஆசையை எடுத்துச் சொல்லும்.கேது போன ஜென்மத்தில் நிறைவேறாத கடமையை எடுத்து சொல்லும்.
★ராகு பகவானுக்கு வெறும் தலை மட்டும்தான் வெறும் தலை மட்டும் கொண்ட ராகு பகவானுக்கு
ஜூனரம் என்பதே கிடையாது எவ்வளவு கொடுத்தாலும் ஆசை தீராது.
★ராகு பகவானுக்கு ஒரு விஷயம் தனக்கு வேண்டும் என்றால் அல்லது அடைய வேண்டுமென்றால் அடுத்தவர்களின் மூலமாகத்தான் அந்த ஆசையை ராகு பகவான் நிறைவேற்றிக் கொள்ளும்.
★அதனால்தான் தீராத ஆசை உடைய ஆவிகள் தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள அடுத்த வர்களின் உடம்பிற்குள் சென்று தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறது.அந்தத் தீராத ஆசை உடைய ஆவிகள் தான் ராகு பகவான்.
★அதே போன்றுதான் நமது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து ராகு பகவான் எந்த இடத்தில் இருக்கிறாரோ அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறாரோ அந்த கிரக காரகத்துவங்களும் அந்த பாவ கிரக காரகத்துவங்கள் இந்த ஜாதகருக்கு இந்த ஜென்மத்தில் எவ்வளவு கொடுத்தாலும் ஆசை தீராது.
★கேது நம் லக்னத்தில் இருந்து எந்த பாவத்தில் இருக்கிறதோ எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறதோ அந்த கிரக காரகத்துவ விஷயங்களும் பாவ காரகத்துவ விஷயங்களும் நாம் இந்த ஜென்மத்தில் கடனுக்கு அல்லது கடமைக்கு என்றே செய்வோம்.
★நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன.
*மூலாதாரம்
*சுவாதிஷ்டானம்
*மணிப்பூரகம்
*அனாஹதம்
*விசுக்தி
*ஆக்நீயா
*சகஸ்ராரம்.
★இந்த ஏழு சக்கரங்களும் ராகு கேது உடைய நட்சத்திரங்களாகும்.அதாவது
★மூலாதாரம் மூலம் நட்சத்திரம்.
★சுவாதிஷ்டானம் சுவாதி நச்சத்திரம்.
★மணிப்பூரகம் மகம் நட்சத்திரம்.
★அனாஹதம் சதயம் நட்சத்திரம்.
★விசுக்தி அஸ்வினி நட்சத்திரம்.
★இந்த ஏழு சக்கரங்கள் தான் ஒரு மனிதனை இயக்குகிறது.அப்போது இந்த ஏழு சக்கரங்களே ராகு கேது உடையது.
★இந்தப் பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இடையே இருக்கும் தொடர்பு அல்லது Connectionஐ ஏற்படுத்துபவர்களே இராகு கேது தான்.
★ஏன் செய்வினை செய்பவர்கள் ஏவல், பில்லி ,சூனியம், மாந்திரீகம் செய்பவர்கள் நமது உச்சந் தலை முடியையும்.கால் நகத்தையும் கேட்கிறார்கள்.
★ஏனென்றால் பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இருக்கும் தொடர்பை நீக்குவதற்கு அதனால்தான் அமாவாசையில் இது எல்லாம் செய்கிறார்கள்.
★அம்மாவாசை செய்தால் தான் இதையெல்லாம் செய்ய இயலும்.அல்லது பலிக்கும்.
★அதனால்தான் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமே இராகு கேதுவின் கையில் உள்ளது.
★இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திர மண்டலங்களை மூன்று பிரிவுகளாக 1 5 9 திரிகோணங்களாக பிரிக்கின்றனர்.
★அதனால்தான் இந்த பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திர மண்டலங்களில் முதல் நட்சத்திர மண்டலம் "அஸ்வினி" என்ற கேதுவின் நட்சத்திரத்தில் ஆரம்பிக்கிறது. இரண்டாவது நட்சத்திர மண்டலம்"மகம்"
நட்சத்திரத்திலும் மூன்றாவது நட்சத்திர மண்டலம் "மூலம்' நட்சத்திரத்திலும் அமைகிறது.இந்த மூன்று நட்சத்திர மண்டலங்களின் ஆரம்ப புள்ளிகளே கேதுவின் நட்சத்திரத்தில் தான் ஆரம்பிக்கிறது.
★இதனால்தான் ஜோதிடத்தில் ராகு கேது பகவானுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

ஜோதிட உலகத்தில் இருக்கும் "வக்ர கிரகங்கள்" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்..?

  தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.. ★"வக்ர கிரகங்கள்" என்பது நமது ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 5,6,7,8 பாவங்களில் "செவ்வாய், சனி, குரு"இந்த கிரகங்கள் இருந்தால் வக்ரமாக கருதப்படுகிறது. ★சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் 40 டிகிரி இடைவெளி இருந்தால் சுக்கிரன் வக்கரமாகவும், ★சூரியனுக்கும் புதனுக்கும் இடையில் 17 டிகிரி இடைவெளி இருந்தால் புதன் வக்கிரமாகவும் கருதப்படுகிறது. ★வக்கிரமான கிரகங்கள் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயத்தில் நமக்கு விசித்திரமான, வித்தியாசமான, மாற்று சிந்தனை உடைய, நடைமுறைக்கு ஒத்துவராத, வழக்கத்திற்கு மாறான முறையில் நம் மனதில் தோற்றுவிக்கும் மற்றும் நம்மை வழி நடத்தும். ★உதாரணமாக 4ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் வீடு வண்டி, வாகனம், சொத்து, property போன்றவற்றில் நம்மை விசித்திரமாக,வித்தியாசமாக, மாற்று சிந்தனை உடையதாக நம்மை வழி நடத்தும். ★10ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் விசித்திரமான தொழில் வித்தியாசமான தொழில் மாற்று சிந்தனை உடைய தொழில், எல்லோரும் ஒரு மாதிரி தொழில் செய்தால் இவர் அதற்கு நேர்மாறாக ...

*பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!*

  *பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!* 1. தினப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். 2. கணப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் மங்களம் உண்டு. 3. மகேந்திரப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் விருத்தியாகும். 4. ஸ்த்ரீ தீர்க்கம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்க முடியும். சொத்துக்கள் முதலில் தங்கும். 5. யோனி கூடம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவியின் தாம்பத்தியம் ருசிக்கும். 6. ராசிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தி அடைந்து செழிக்கும். 7. ராசி அதிபதிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கரு சீக்கிரத்தில் உண்டாகும். 8. வசியப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பார்கள். 9. ரஜ்ஜுப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கடைசி வரை பெண் சுமங்கலியாக இருப்பாள். 10. வேதை பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் தம்பதிகளுக்கு பெரிய துக்கங்கள் வராமல் காக்கும்.
  *தினமும் வளரும் அதிசய நந்தி கோவில்.* பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக உள்ளது ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்திய நாட்டில் லட்சக்கணக்கில் கோவில்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான பல கோவில்கள் அதிசயத்தக்க சிறப்பம்சங்களும், வரலாறு பின்னனின் கொண்டதாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்த பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இருக்கும் நந்தி சிலையின் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தொல்பொருள் ஆய்வுத் துறையும்கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். ​கோவிலின் வரலாறு இந்த கோவில் வைணவ மரபுகளின்படி கட்டப்பட்டுள்ளது. இது 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்க வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிஹர் புக்க ராய் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் ஐதராபாத்தில் இருந்து 308 கி.மீ தொலைவிலும், விஜயவாடாவிலிருந்து 359 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பண்டைய கால பல்லவர்கள், சோழர்...