Skip to main content

ஜோதிட உலகத்தில் இருக்கும் "பாதகாதிபதி" பற்றிய சில முக்கியமான தகவல்கள். (தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்)


★பாரம்பரிய ஜோதிடத்திலும் வேதஜோதிடதிலும் "பாதகாதிபதி" பற்றிய சில முரண்பட்ட தகவல்கள் இருக்கின்றன.
★உண்மையில் பாதகாதிபதி யார் நமது ஜாதகத்தில் பாதகாதிபதி மூலம் என்ன விதமான பிரச்சினைகள் நமக்கு வரும் என்பதை பார்க்கலாம்.
★சர லக்னம், சிர லக்னம் உபய லக்னம்,இந்த மூன்று லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பாதகாதிபதி வேறுபடுகிறது.அவற்றை கடைசியில் படத்தில் காண்பித்திருக்கிறேன்.
பார்த்துக்கொள்ளவும்.
1.சரலக்னங்கள், 2.பாதகஸ்தானம் 3.பாதகாதிபதி
★மேஷம் கும்பம் சனி
★கடகம் ரிஷபம் சுக்கிரன்
★துலாம் சிம்மம் சூரியன்
★மகரம் விருச்சிகம் செவ்வாய்
1.சிர லக்னங்கள் 2.பாதகஸ்தானம்
3.பாதகாதிபதி
★ரிஷபம் மகரம் சனி
★சிம்மம் மேஷம் செவ்வாய்
★விருச்சிகம் கடகம் சந்திரன்
★கும்பம் ரிஷபம் சுக்கிரன்
1.உபய லக்னங்கள் 2.பாதகஸ்தானம்
3.பாதகாதிபதி
★மிதுனம் தனுசு. குரு
★கன்னி மீனம். குரு
★தனுசு மிதுனம் புதன்
★மீனம் கன்னி புதன்
★பாதகாதிபதி நமது ஜாதகத்தில் எப்படி வேலை செய்யும் என்றால்
நம்முடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அல்லது அடுத்த நிலைக்குப் போவதற்கு என்ன என்ன விஷயங்கள் நமக்கு தேவையோ அதனை நம்மிடம் பாதகாதிபதி பிடிக்காத மாதிரி சொல்வார்கள்.
★எந்தெந்த விஷயம் நாம் செய்ய வேண்டுமோ அல்லது எந்தெந்த விஷயங்கள் நமக்கு பிடிக்குமோ அதனை பாதகாதிபதி நம்மிடம் பிடிக்காத மாதிரி சொல்வார்கள்.
★எந்தெந்த விஷயங்கள் நாம் செய்யக் கூடாதோ,எந்த செயலை நாம் செய்யக் கூடாதோ அல்லது எதனைச் சார்ந்து நாம் இருக்கக் கூடாதோ அதனை நம்மிடம் பாதகாதிபதி பிடித்த மாதிரி சொல்வார்கள்.
★பாதகாதிபதி நம்மிடம் பிடித்த மாதிரி ஏதாவது ஒரு விஷயம் செய்யச் சொன்னால் நாம் அதை செய்யக்கூடாது.மீறி செய்தால் நமக்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும்.
★பாதகாதிபதி நம்மிடம் பிடிக்காத மாதிரி ஒரு விஷயம் செய்ய சொன்னால் நாம் அதை தான் செய்ய வேண்டும்.பாதகாதிபதி நமக்கு பிடிக்காத மாதிரி சொன்ன விஷயத்தை நாம் செய்தால் நம் வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு போகக் கூடிய வாய்ப்புகள் நமக்கு வரும்.
★அதாவது பிடிக்காத மாதிரி சொன்ன விஷயத்தை செய்ய வேண்டும் பிடித்த மாதிரி சொன்ன விஷயத்தை செய்யக்கூடாது அவ்வளவுதான்.
★உதாரணமாக சிர லக்னங்களில் பிறந்தவர்களுக்கு பாதகாதிபதி 9ம் பாவம் ஆகும்.9ம் பாவம் என்பது தந்தை ஸ்தானம் ஆகும்.
★ ஸ்திர லக்னங்களில் பிறந்தவர்களுக்கு தந்தை ஒரு விஷயம் நமக்கு பிடித்த மாதிரி சொன்னால் அதனை நாம் செய்யக்கூடாது.மீறி செய்தால் நாம் பிரச்சினையில் மாட்டிக் கொள்வோம்.
★தந்தை நமக்கு ஒரு விஷயத்தை பிடிக்காத மாதிரி சொன்னால் அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.
அதுதான் நம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழி ஆகும்.
★பிடித்த மாதிரி ஒரு விஷயம் சொன்னால் அது அவுட்.பிடிக்காத மாதிரி ஒரு விஷயம் சொன்னால் அதுதான் நமக்கு passive.
★சர லக்னங்களில் பிறந்தவர்களுக்கு பதினோராம் பாவம் பாதகாதிபதி ஆகும்.11 ஆம் பாவம் என்பது மூத்த சகோதரர், சித்தப்பா
★சர லக்னங்களில் பிறந்தவர்கள் என்றைக்குமே மூத்த சகோதரர் மற்றும் சித்தப்பா ஒரு விஷயத்தை பிடித்த மாதிரி நம்மிடம் சொன்னால் அதனை செய்யக்கூடாது.
★பிடிக்காத மாதிரி ஒரு விஷயம் சொன்னால் அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.
★உபய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 7ம் பாவம் பாதகாதிபதி ஆகும்.
★உபய லக்னங்களில் பிறந்தவர்கள் என்றைக்குமே மனைவி அல்லது காதலன் அல்லது காதலி ஒரு விஷயம் பிடித்த மாதிரி நம்மிடம் சொன்னால் அதை செய்யக்கூடாது.
★பிடிக்காத மாதிரி சொன்னால் அதனை தான் செய்ய வேண்டும்.
★இந்த சூட்சமம் பாதக ஸ்தானத்தில் இருக்கும் கிரகத்திற்கும் பொருந்தும்.
உதாரணமாக பாதக ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தால் இளைய சகோதரர் நெருங்கிய நண்பர்கள்,
நமக்கு பிடித்த மாதிரி ஒரு விஷயம் செய்ய சொன்னால் நாம் அதை செய்யக்கூடாது.
★பாதக ஸ்தானத்தில் சந்திரன் இருந்தால் தாய்,குரு இருந்தால் குழந்தைகள்,சுக்கிரன் இருந்தால் மனைவி அல்லது காதலன் அல்லது காதலி,சனி இருந்தால் மூத்த சகோதரர்,சித்தப்பா,சூரியன் இருந்தால் தந்தை,புதன் இருந்தால் தாய் மாமா,இவற்றில் எந்த கிரகம் பாதக ஸ்தானத்தில் இருக்கிறதோ அந்த கிரகத்தின் உறவுகள்.பிடித்த மாதிரி ஒரு விஷயம் நம்மை செய்ய சொன்னால் நாம் அதை செய்யக்கூடாது.
★பிடிக்காத மாதிரி ஒரு விஷயம் நம்மை சொன்னால் அதுதான் நம்முடைய வாழ்க்கையை அடுத்த நிலைக்கு நம்மை உயர்த்தக்கூடிய வழியாகும்.

Comments

Popular posts from this blog

ஜோதிட உலகத்தில் இருக்கும் "வக்ர கிரகங்கள்" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்..?

  தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.. ★"வக்ர கிரகங்கள்" என்பது நமது ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 5,6,7,8 பாவங்களில் "செவ்வாய், சனி, குரு"இந்த கிரகங்கள் இருந்தால் வக்ரமாக கருதப்படுகிறது. ★சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் 40 டிகிரி இடைவெளி இருந்தால் சுக்கிரன் வக்கரமாகவும், ★சூரியனுக்கும் புதனுக்கும் இடையில் 17 டிகிரி இடைவெளி இருந்தால் புதன் வக்கிரமாகவும் கருதப்படுகிறது. ★வக்கிரமான கிரகங்கள் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயத்தில் நமக்கு விசித்திரமான, வித்தியாசமான, மாற்று சிந்தனை உடைய, நடைமுறைக்கு ஒத்துவராத, வழக்கத்திற்கு மாறான முறையில் நம் மனதில் தோற்றுவிக்கும் மற்றும் நம்மை வழி நடத்தும். ★உதாரணமாக 4ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் வீடு வண்டி, வாகனம், சொத்து, property போன்றவற்றில் நம்மை விசித்திரமாக,வித்தியாசமாக, மாற்று சிந்தனை உடையதாக நம்மை வழி நடத்தும். ★10ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் விசித்திரமான தொழில் வித்தியாசமான தொழில் மாற்று சிந்தனை உடைய தொழில், எல்லோரும் ஒரு மாதிரி தொழில் செய்தால் இவர் அதற்கு நேர்மாறாக ...

*பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!*

  *பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!* 1. தினப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். 2. கணப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் மங்களம் உண்டு. 3. மகேந்திரப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் விருத்தியாகும். 4. ஸ்த்ரீ தீர்க்கம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்க முடியும். சொத்துக்கள் முதலில் தங்கும். 5. யோனி கூடம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவியின் தாம்பத்தியம் ருசிக்கும். 6. ராசிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தி அடைந்து செழிக்கும். 7. ராசி அதிபதிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கரு சீக்கிரத்தில் உண்டாகும். 8. வசியப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பார்கள். 9. ரஜ்ஜுப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கடைசி வரை பெண் சுமங்கலியாக இருப்பாள். 10. வேதை பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் தம்பதிகளுக்கு பெரிய துக்கங்கள் வராமல் காக்கும்.
  *தினமும் வளரும் அதிசய நந்தி கோவில்.* பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக உள்ளது ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்திய நாட்டில் லட்சக்கணக்கில் கோவில்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான பல கோவில்கள் அதிசயத்தக்க சிறப்பம்சங்களும், வரலாறு பின்னனின் கொண்டதாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்த பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இருக்கும் நந்தி சிலையின் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தொல்பொருள் ஆய்வுத் துறையும்கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். ​கோவிலின் வரலாறு இந்த கோவில் வைணவ மரபுகளின்படி கட்டப்பட்டுள்ளது. இது 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்க வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிஹர் புக்க ராய் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் ஐதராபாத்தில் இருந்து 308 கி.மீ தொலைவிலும், விஜயவாடாவிலிருந்து 359 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பண்டைய கால பல்லவர்கள், சோழர்...