Skip to main content

*மஹா பெரியவா தரிசன அனுபவங்கள்"

 


*மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - சக்கரம் வச்ச வண்டியில் ஏறுவது இல்லை*
பண்டரிபுரத்தில் பெரியவா தங்கியிருந்த சமயம். அருகேயிருந்த சர்க்கரை ஆலையின் அதிகாரி, பெரியவாளிடம் அவரது பாதாரவிந்தங்கள் தமது ஆலையை ஒரு முறை மிதிக்க வேண்டும் என்று வேண்டி, அப்பொழுதே வருவதாக இருந்தால் தமது வண்டியிலேயே அழைத்துப்போய் வந்து விடுவதாகக் கூறினார்.
பெரியவாள் உடனே சிரித்து விட்டு, “நான் சக்கரம் வைத்த வண்டியில் ஏறுவதில்லை” என்று கூறினார். வந்த அதிகாரி மிகவும் ஆச்சர்யப்பட்டு “இந்த இருபதாம் நூற்றாண்டிலே தாங்கள் இப்படி இருக்க வேண்டுமா ? வண்டியில் வந்தால் பல மணி நேரம் மிச்சமாகுமே, அதிகமான இடங்களைக் காண வாய்ப்புக் கிடைக்குமே” என்றார்.
பெரியவாள், “நான் பதிமூன்று வயதில் பட்டத்திற்கு வந்த உடனே சக்கரம் வைத்த வண்டியில் ஏறுவதில்லை என்று சங்கற்பித்துக் கொண்டேன். ஒரு முறை நான் ஒரு ஊருக்குச் சென்று கொண்டிருந்தேன். மழையே இல்லாமல் இருந்த அந்த ஊரில் என்னவோ தெரியவில்லை, நல்ல மழை பிடித்துக் கொண்டது. போகும் வழியில் இருபுறமும் பள்ளமாகவும் நடுவே சற்று மேடாகவும் இருந்ததால், ஓடும் நீரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அந்நிலத்திலிருந்த ஜீவராசிகள் பலவும் மேட்டுக்கு வந்து விட்டன. அப்பொழுது சாலையில் சென்ற பல வாகனங்களால் அவற்றிற்கு அழிவு ஏற்பட்டது. அன்றே நான் சக்கரம் வைத்த வண்டியில் ஏறி ஜீவ ஹிம்சைக்குக் காரணமாகக் கூடாது என்று மீண்டும் சங்கல்பித்துக் கொண்டேன் .
இன்னொரு காரணமும் உண்டு.
வண்டியில் போவதால் பல ஊர்களைக் காண இயலாது போய் விடும். வாஹனத்தில் திடீரென்று ஓர் ஊருக்குப் போய் இறங்கினால் அங்கு உள்ளவர்களுக்குச் சிரமம். நடந்து போவதால் போகும் இடத்திலுள்ள மக்கள் அடுத்த ஊருக்கு முன்பே தெரியப்படுத்தி வசதி செய்து தருகின்றார்கள் இல்லையா ?” என்ற வினா எழுப்பிச் சுற்றி நின்றவர்களைப் பார்த்து தமது அருளைப் புன்னகையோடு குழைத்து அளித்தார்.
வாருங்கள். பாரதம் வலம் வந்த பாதமலர்களுக்கு பூஜைகள் செய்திடுவோம்!
*பெரியவா சரணம்!*

Comments

Popular posts from this blog

ஜோதிட உலகத்தில் இருக்கும் "வக்ர கிரகங்கள்" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்..?

  தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.. ★"வக்ர கிரகங்கள்" என்பது நமது ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 5,6,7,8 பாவங்களில் "செவ்வாய், சனி, குரு"இந்த கிரகங்கள் இருந்தால் வக்ரமாக கருதப்படுகிறது. ★சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் 40 டிகிரி இடைவெளி இருந்தால் சுக்கிரன் வக்கரமாகவும், ★சூரியனுக்கும் புதனுக்கும் இடையில் 17 டிகிரி இடைவெளி இருந்தால் புதன் வக்கிரமாகவும் கருதப்படுகிறது. ★வக்கிரமான கிரகங்கள் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயத்தில் நமக்கு விசித்திரமான, வித்தியாசமான, மாற்று சிந்தனை உடைய, நடைமுறைக்கு ஒத்துவராத, வழக்கத்திற்கு மாறான முறையில் நம் மனதில் தோற்றுவிக்கும் மற்றும் நம்மை வழி நடத்தும். ★உதாரணமாக 4ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் வீடு வண்டி, வாகனம், சொத்து, property போன்றவற்றில் நம்மை விசித்திரமாக,வித்தியாசமாக, மாற்று சிந்தனை உடையதாக நம்மை வழி நடத்தும். ★10ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் விசித்திரமான தொழில் வித்தியாசமான தொழில் மாற்று சிந்தனை உடைய தொழில், எல்லோரும் ஒரு மாதிரி தொழில் செய்தால் இவர் அதற்கு நேர்மாறாக ...

*பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!*

  *பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!* 1. தினப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். 2. கணப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் மங்களம் உண்டு. 3. மகேந்திரப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் விருத்தியாகும். 4. ஸ்த்ரீ தீர்க்கம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்க முடியும். சொத்துக்கள் முதலில் தங்கும். 5. யோனி கூடம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவியின் தாம்பத்தியம் ருசிக்கும். 6. ராசிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தி அடைந்து செழிக்கும். 7. ராசி அதிபதிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கரு சீக்கிரத்தில் உண்டாகும். 8. வசியப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பார்கள். 9. ரஜ்ஜுப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கடைசி வரை பெண் சுமங்கலியாக இருப்பாள். 10. வேதை பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் தம்பதிகளுக்கு பெரிய துக்கங்கள் வராமல் காக்கும்.
  *தினமும் வளரும் அதிசய நந்தி கோவில்.* பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக உள்ளது ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்திய நாட்டில் லட்சக்கணக்கில் கோவில்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான பல கோவில்கள் அதிசயத்தக்க சிறப்பம்சங்களும், வரலாறு பின்னனின் கொண்டதாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்த பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இருக்கும் நந்தி சிலையின் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தொல்பொருள் ஆய்வுத் துறையும்கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். ​கோவிலின் வரலாறு இந்த கோவில் வைணவ மரபுகளின்படி கட்டப்பட்டுள்ளது. இது 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்க வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிஹர் புக்க ராய் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் ஐதராபாத்தில் இருந்து 308 கி.மீ தொலைவிலும், விஜயவாடாவிலிருந்து 359 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பண்டைய கால பல்லவர்கள், சோழர்...