Skip to main content

ஜோதிட உலகத்தில் இருக்கும் "வக்ர கிரகங்கள்" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்..?

 தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்..


★"வக்ர கிரகங்கள்" என்பது நமது ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 5,6,7,8 பாவங்களில் "செவ்வாய், சனி, குரு"இந்த கிரகங்கள் இருந்தால் வக்ரமாக கருதப்படுகிறது.
★சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் 40 டிகிரி இடைவெளி இருந்தால் சுக்கிரன் வக்கரமாகவும்,
★சூரியனுக்கும் புதனுக்கும் இடையில் 17 டிகிரி இடைவெளி இருந்தால் புதன் வக்கிரமாகவும் கருதப்படுகிறது.
★வக்கிரமான கிரகங்கள் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயத்தில் நமக்கு விசித்திரமான, வித்தியாசமான, மாற்று சிந்தனை உடைய, நடைமுறைக்கு ஒத்துவராத,
வழக்கத்திற்கு மாறான முறையில் நம் மனதில் தோற்றுவிக்கும் மற்றும் நம்மை வழி நடத்தும்.
★உதாரணமாக 4ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் வீடு வண்டி, வாகனம், சொத்து, property போன்றவற்றில் நம்மை விசித்திரமாக,வித்தியாசமாக, மாற்று சிந்தனை உடையதாக நம்மை வழி நடத்தும்.
★10ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் விசித்திரமான தொழில் வித்தியாசமான தொழில் மாற்று சிந்தனை உடைய தொழில்,
எல்லோரும் ஒரு மாதிரி தொழில் செய்தால் இவர் அதற்கு நேர்மாறாக தொழில் செய்வார்.அதாவது தொழிலை வித்தியாசமான முறையில் செய்வார்.
★9ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் விசித்திரமான கல்வி வித்தியாசமான கல்வி அதாவது 9ம் பாவம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஜாதகர் விசித்திரமாக வித்தியாசமாக செயல்படுவார்.
★5ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் காதல் விஷயத்தில் விசித்திரமாகவும் வித்தியாசமாகவும் மாற்று சிந்தனை உடைய தாகவும் நம்மை செயல்படுத்தும்
★6ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் உத்தியோகத்தில் விசித்திரமாகவும் வித்தியாசமாகவும் நம்மை செயல்படுத்தும்.
★12ம் பாவத்தில் வக்கிரமான கிரகங்கள் இருந்தால் அயன, சயன போகம், காம சுகபோக ஆசைகள் படுக்கை அறை, போன்றவற்றில் நம்மை விசித்திரமாகவும் வித்தியாசமாகவும்,மாற்று சிந்தனை உடைய தாகவும் ஜாதகர் இருப்பார் அல்லது நம்மை செயல்படுத்தும்.
★அதாவது வக்கிரமான கிரகங்கள் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவத்தில் இந்த சூட்சுமத்தை பொருத்திப் பாருங்கள்.
★இப்பொழுது கிரகங்கள் வக்ரம் ஆனால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
★செவ்வாய் வக்ரமாகி விட்டால் வீடு வண்டி,வாகனம்,சொத்து விளையாட்டு,உத்தியோகம் போன்ற விஷயங்களில் விசித்திரமாகவும் வித்தியாசமாகவும் மாற்று சிந்தனை உடைய தாகவும் வழக்கத்திற்கு மாறாகவும் நாம் செயல்படுவோம்.
★சுக்ரன் வக்ரமாகி விட்டால் காதல், காமம், அயன சயன போகம், சுகபோக வாழ்க்கை, படுக்கையறை விஷயங்கள்,செலவு சார்ந்த விஷயங்களில் நம்மை விசித்திரமாகவும் வித்தியாசமானதாகவும் மாற்று சிந்தனை உடையதாகவும்,
வழக்கத்திற்கு மாறாகவும் நம்மை வழிநடத்தும் அல்லது நம்மை செயல்படுத்தும்.
★குரு வக்ரமாக விட்டால் குழந்தைகள் மற்றும் கடவுள் நம்பிக்கை,கடவுளை வணங்குவது வருமானம்,பணத்தை சேமிப்பது போன்ற விஷயங்களிலும் ஜாதகர் விசித்திரமான வித்தியாசமான மாற்று சிந்தனை உடையவராக இருப்பார்.
★சனி வக்ரமாகி விட்டால் தொழில் சார்ந்த விஷயத்தில் ஜாதகர் விசித்திரமாக வித்தியாசமாக
மாற்று சிந்தனை உடையவராகவும்,
வழக்கத்திற்கு மாறாகவும் செயல்படுவார்.
★புதன் வக்ரம் ஆகிவிட்டால் பேச்சு சார்ந்த விஷயமும் அறிவு சார்ந்த விஷயங்களிலும் விசித்திரமாக வித்தியாசமாக வழக்கத்திற்கு மாறாக இருப்பார்.
★சந்திரன், ராகு, கேதுவிற்கு, வக்ரகதி கிடையாது.
★இப்பொழுது பாவ அதிபதிகள் வக்ரமாகி விட்டால் என்ன பலன் என்பதை பார்க்கலாம்.
★லக்னாதிபதியே ஒரு ஜாதகத்தில் வக்ரமாகி விட்டால் அந்த ஜாதகர் பிறப்பிலேயே விசித்திரமான வராகவும், வித்தியாசமானவராகவும், மாற்று சிந்தனை உடைய வராகவும், கூட்டத்தோடு ஒத்து வாழதவறாகவும்.
எல்லோரும் ஒரு வழியில் சென்றால் இவர் ஒரு வழியில் செல்வார்.
அதாவது மற்றவர்களைக் காட்டிலும் தனித்துவமாக செயல்பட கூடியவராக இருப்பார்.
★4ம் அதிபதி வக்ரமாகி விட்டால் வீடு வண்டி வாகனம் சொத்து இவற்றை வாங்குவதில் வழக்கத்திற்கு மாறாக இருப்பார்.
★உதாரணமாக எல்லோரும் 30 லட்சத்துக்கு வீடு வாங்கினால் இவர் 30 லட்சத்திற்கு வீட்டு இடத்தை மட்டும் வாங்கிப் போடுவார்.
★6ம் அதிபதி வக்ரம் ஆகிவிட்டால் கடன், வம்பு ,அடிதடி,சண்டை, போட்டி உத்தியோகம் போன்ற விஷயங்களில் வழக்கத்திற்கு மாறாக செயல்படுவார் அல்லது தனித்துவமாக செயல்படுவார்.
★7ம் அதிபதியே வக்ரமாகி விட்டால் களஸ்திர ஸ்தானமே வக்கிரம் என்று அர்த்தம். அதாவது வரக்கூடிய கணவன் அல்லது மனைவியே வித்தியாசமானவராகவும் விசித்திரமாணவராகவும் மாற்று சிந்தனைஉடையவராகவும் இருப்பார்.
★10ம் அதிபதி வக்ரம் ஆகிவிட்டால் இந்த ஜாதகர் தொழிலையே வித்தியாசமானதாகவும் விசித்திரமானதாகவும்,மற்றவர்களை
காட்டிலும் தொழிலில் மாற்று சிந்தனை உடையவராக தொழில் செய்வார்.
★9ம் அதிபதி வக்ரம் ஆகிவிட்டால் தொலைதூரப் பயணம் மற்றும் உயர் கல்வி சார்ந்த விஷயங்களில் வித்தியாசமானதாகவும் வழக்கத்திற்கு மாறாகவும் செயல்படுவார்.
★12ம் அதிபதி வக்ரம் ஆகிவிட்டால் அயன சயன போகம் படுக்கையறை சார்ந்த விஷயங்கள் காதல், காமம் விரயச் செலவுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வழக்கத்திற்கு மாறாக ஜாதகர் செயல்படுவார்.
★அதாவது எந்தெந்த பாப அதிபதிகள் வக்ரமாகி இருக்கிறார்களோ அந்த பாவம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இந்த சூட்சுமத்தை பொருத்திப் பாருங்கள்.
★மேலும் வக்ரமான கிரகங்கள் ஒரு பிரிவினையை ஏற்படுத்தும்.
★அதாவது லக்னத்திலும் இரண்டாம் பாவத்திலும் வக்கிரமான கிரகம் இருந்தால் ஜாதகர் தொழில் ரீதியாகவோ அல்லது உத்தியோகம் ரீதியாகவோ அல்லது வருமானம் ரீதியாகவோ தன் குடும்பத்தை விட்டு சில காலங்கள் பிரிந்து வாழ வேண்டிய நிலை ஏற்படும்.
★லக்னாதிபதியே அல்லது இரண்டாம் அதிபதியே வக்ரம் ஆகிவிட்டால் இந்த ஜாதகரே சில காலங்கள் தன் குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய நிலை ஏற்படும்.
★எந்த பாவத்தின் அதிபதி லக்னத்தில் அல்லது இரண்டாம் பாகத்திலும் இருக்கிறதோ அந்த பாவத்தின் காரகத்துவம் மூலமாக இந்த ஜாதகர் சில காலங்கள் பிரிந்து வாழ்வார்.
★உதாரணமாக 10ம் அதிபதி லக்னத்திலும் அல்லது இரண்டாம் பாவத்திலும் இருந்தால் தொழிலை சாக்காக வைத்து இந்த ஜாதகர் குடும்பத்தை விட்டு சில காலங்கள் பிரிந்து வாழ்வார்.
★6ம் அதிபதி லக்னத்தில் அல்லது இரண்டாம் பாவத்தில் இருந்தால் உத்தியோகத்தை(job) சாக்காக வைத்து சில காலங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்வார்.
★4ம் அதிபதி லக்னத்தில் அல்லது 2ம் பாவத்தில் இருந்தால் படிப்பை காரணமாக வைத்து சில காலங்கள் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்பவர்.
★2ம் அதிபதி வக்ரமாகி 2ம் பாவத்திலேயே இருந்தால் வருமானத்திற்காக ஜாதகர் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்வார்.
★இரண்டாம் அதிபதி வக்கிரமாகி லக்னத்தில் இருந்தால் ஜாதகர் ஏதோ ஒரு காரணத்திற்காக தன் குடும்பத்தை விட்டு சில காலங்கள் நிரந்தரமாகவோ அல்லது குறிப்பிட்ட காலமோ பிரிந்து வாழ்வார்.
★9ம் பாவத்திலும் 10ம் பாவத்திலும் வக்ரமான கிரகங்கள் இருந்தால் நமது தந்தை தொழில் ரீதியாகவோ உத்தியோகம் ரீதியாகவோ வருமானத்திற்காகவோ தன் குடும்பத்தை விட்டு சில காலங்கள் பிரிந்து வாழ்ந்திருப்பார்.
★இந்த சூட்சுமத்தை சூரியன் இருக்கும் பாவத்திலிருந்து லக்னமாக எடுத்து கொள்ள வேண்டும்.
★மேற்கொண்டு இந்த சூட்சுமத்தை ஜாதகத்தில் check செய்து பாருங்கள் நான் சொல்வது உங்களுக்கு புரியும்.

Comments