Skip to main content

கால சர்ப்ப தோஷம் பற்றிய ஜோதிடத்தில் சில பொதுவான தவறான புரிதல்கள் உள்ளன..?

 "கால சர்ப்ப தோஷம் பற்றிய ஜோதிடத்தில் சில தவறான புரிதல்கள் உள்ளன.

"ராகு கேது "பற்றிய இன்னும் சில முக்கியமான தகவல்கள்.
★கால சர்ப்ப தோஷம் பற்றிய உண்மையான தகவல்கள்.கால சர்ப்ப தோஷம் என்பது ராகு கேது இடையில் மற்ற அனைத்து கிரகங்களும் அகப்பட்டு கொண்டால்.அது கால சர்ப்ப தோஷம் என்று கருதப்படுகிறது.
★காலசர்ப்பதோஷம் ஒரு ஜாதகத்தில் இருந்தால் அந்த ஜாதகருக்கு தொழில் முடங்கும் நாக தோஷம் இருக்கிறது ராகு தோஷம் இருக்கிறது. விபத்து ஏற்படும் என்று சொல்வார்கள்.அது எல்லாம் முற்றிலும் தவறு.
★அதற்கும் ராகு தோஷத்திற்கும் சம்பந்தம் கிடையாது.
★கால சர்ப்ப தோஷத்திற்கும் ஒருவருக்கு கிரகங்கள் நன்மை செய்யுமா தீமை செய்யுமா என்பத தற்கும் சம்பந்தமே கிடையாது.
★ஒருவருக்கு கால சர்ப்ப தோஷம் இருந்து அவருக்கு ராகு திசை அல்லது கேது திசை நடந்தால் பிரச்சினைகள் ஏற்படும் என்று சொல்வது தவறு.யாரும் பயப்படத் தேவையில்லை.
★ராகு கேது கிடையே அகப்பட்டுக் கொண்ட கிரகங்களின் காரகத்துவம் மெதுவாகத்தான் கிடைக்கும் என்பதும் தவறு.
★ஆனால் சூரிய கிரணத்தன்று கால சர்ப்ப தோஷம் உடையவர்கள் வெளியில் அதிகமாக செல்லக் கூடாது.
★முக்கியமாக கால கால சர்ப்ப தோஷம் உடையவர்கள் மூதாதையர்களுக்கு திதி கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
★திதி என்பது என்ன நாம் எதற்கு திதி கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
★திதி ஏன் கொடுக்கிறோம் என்றால் நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நிறைய விஷயங்களை பார்த்திருப்பார்கள்.மற்றும் உணர்ந்திருப்பார்கள் அவர்கள் மனதிற்குள் தீராத ஆசை, தீராத கோபம்,தீராத இச்சை, தீராத ஏக்கம் போன்றவர்கள் இருந்திருக்கும்.
★அந்த ஆசைகள் நிறைவேறாமலேயே அவர்கள் இறந்துபோயிருப்பார்கள்.
★அவர்களின் இந்த தீராத ஆசைகள் எண்ணங்கள் எல்லாம் நம் குடும்பத்தினரை அல்லது வம்சத்தினரை சுற்றி காற்றில் மிதந்து கொண்டே இருக்கும்.
★நம் முன்னோர்களின் ஆசைகளில் இருக்கும் தவறான சில விஷயங்கள் நம் குடும்பதினை மற்றும் நம் வம்சத்தினரை தாக்கக் கூடாது என்பதற்காகத்தான் நாம் நம் முன்னோர்களுக்கு திதி கொடுக்கிறோம்.
★திதி கொடுத்தால் நம்மைச் சுற்றி உள்ள காற்றில் இருக்கும் அவர்களின் தவறான எண்ணங்கள் அழிந்துவிடும்.மற்றும் அவர்களின் நல்ல எண்ணங்கள் நம்மை வந்து சேர்ந்து விடும்.இதற்காகத்தான் திதியை கொடுக்கிறோம்.
★ஒலியும் ஒளியும் தான் ராகுவும் கேதுவும்.
★ராகு கேது வேறொன்றும் கிடையாது இடியும்,மின்னலும் தான் ராகு கேது.
★ராகு தோஷம் உடையவர்களை தான் இடியும் மின்னலும் தாக்கும்
★இடியும் மின்னலும் ஒரு சேர்ந்து வந்தால் இந்த பூமியில் ஒரு இடத்தில் விழுந்து இருக்கிறது என்று அர்த்தம்.
★சப்தம் மூலம்தான் இந்த சிருஷ்டி அல்லது இந்த பிரபஞ்சம் உருவானது என்பது அறிவியல் சார்ந்த ஒரு கருத்து.அந்த சப்ததிற்கு அதிபதியே கேது பகவான் தான்.அதனால்தான் இந்த சிருஷ்டியின் ஆரம்பப் புள்ளி அஸ்வினி என்ற கேதுவின் நட்சத்திரத்தில் ஆரம்பிக்கிறது.
★ராகு கேது நம்முடைய விந்தணுக்கள் ஆகும் உண்மையிலேயே விந்தணுக்களின் உருவம் தலை மற்றும் வால் சேர்ந்த உருவமாகும்.தலை - ராகு,வால் - கேது
இந்த இரண்டும் சேர்ந்த கலவை தான் நம்முடைய விந்தனுக்கள்.
★அமாவாசை என்பது சூரியனிலிருந்து பூமியை சந்திரன் மறைக்கும் பொழுது ஒரு கருப்பு நிற சாயல் பூமியின் மீது வந்து விழும் அதுதான் அம்மாவாசை.
★பௌர்ணமி என்பது சூரியனிடமிருந்து சந்திரனை பூமி மறைக்கும் பொழுது பூமியின் சிகப்பு நிற சாயம் சந்திரன் மீது விழுகிறது இதுதான் பௌர்ணமி.
★பரிபூரண அம்மாவாசை பரிபூரண பௌர்ணமி எல்லா மாதத்திலும் வராது.
★ராகு கேது பெயர்ச்சிக்கு முன்தினம் வரும் அமாவாசை தான் பரிபூரண அம்மாவாசை பௌர்ணமி ஆகும்.
★பரிபூரண அம்மாவாசையில் தான் திதி கொடுப்பது செய்வினை செய்வது பலிகொடுப்பது.
போன்றவைகளை செய்வார்கள்.
★ராகுவுக்கு அதிதேவதை பத்ரகாளி.உண்மையிலேயே பத்ரகாளிக்கு தான் மனிதர்களின் நர பலி கொடுப்பார்கள்.அதனால் தான் மனிதர்களை நர பலி கொடுப்பதற்கு பத்ரகாளிக்கு பரிபூரண அமாவாசை நாளில் பலி கொடுக்கிறார்கள்
ஏனென்றால் அம்மாவாசை தான் ராகு.
★ கேது ஆன்மீகத்திற்கு காரகத்துவம் ஆன கிரகம் மற்றும் யாகத்திற்கு அதிபதி.அதனால்தான் கோவில்களில் யாகம், ஹோமம் பரிகாரம்,கும்பாபிஷேகம்,
விசேஷங்கள் கேதுவின் நட்சத்திர நாட்களில் நடத்துகிறார்கள்.அல்லது
கேதுவிற்கு உகந்த நாளில் நடத்துகின்றனர்.
★சூரிய ஒளி 9 கிரகங்கள் மீது பட்டு அதனுடைய reflection அல்லது radiation ஆக தான் பூமிக்கு 9 கிரகங்களின் கதிர்வீச்சு வருகிறது.
★இங்கு இருக்கும் அனைத்து கோயில்களிலும் நவகிரகங்கள் சூரிய ஒளியை base செய்து தான் கட்டப்பட்டிருக்கும்.
★சூரிய ஒளி நவகிரகங்கள் மீது பட்டுதான் கருவறைக்குள் இருக்கும் கடவுளின் விக்கிரகத்தை சென்றடைகிறது.
★சூரிய கிரகணத்தின் போது ராகு சூரியனை விழுங்கும் போது சூரிய ஒளி 9 கிரகத்தின் மீது படாமல் போகிறது.
★இதனால் 9 கிரகத்திலிருந்து பூமிக்கு வரும் அந்த கதிர்வீச்சுகள் நிறுத்தப்படுகிறது.
★ஒன்பது கிரகங்கள் தான் இந்த பூமியை கட்டுப்படுத்துகிறது.சூரிய கிரகணம் ஏற்படும் அந்த குறிப்பிட்ட சில நேரங்களில் நமது பூமிக்கும் பிரபஞ்சத்தில் உள்ள இறை சக்திக்கும் தொடர்பு இல்லாமல் போகிறது.
★சூரிய கிரகணம் ஏற்படும் அந்த குறிப்பிட்ட சில நேரத்தில் பூமியில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும் அது மேலே உள்ள இறை சக்திக்கு போய் சென்றடையாது.
★அதனால்தான் சூரிய கிரணத் அன்று அனைத்துக் கோயில்களும் மூடப்படுகின்றன.
★சூரியனே ராகு விழுங்கும் போது அந்த நேரத்தில் நமது பூமியில் உள்ள கோயில்களில் இருக்கும் நவகிரகங்கள் மீது சூரிய வெளிச்சம் படாமல் போய்விடுகிறது.
★இதனால் கோயில் இருக்கும் கருவறையிலுள்ள விக்ரகத்திற்கு சக்தி இல்லாமல் போய்விடுகிறது.
இதனால்தான் சூரிய கிரகணதன்று அனைத்து கோயில்களும் மூடப்படுகின்றன.
★சூரிய கிரணத் தன்றுதான் இந்த தீய செயல்களை செய்யககூடிய
மந்திரவாதிகள் ,செய்வினை செய்பவர்கள் ,அசுரர்கள்,நரபலி கொடுப்பதும் ராகு பகவானுக்கு சிறப்பு யாகத்தை செய்வதும் பத்ரகாளி சிறப்பு யாகத்தை செய்வதும் செய்து தங்களின் சக்தியைப் பெருக்கிக்கொள்வார்கள்.
★சூரிய கிரணத் தன்றுதான் ராகுவின் அதிதேவதையான பத்ரகாளிக்கு நரபலி கொடுப்பார்கள்.
அப்போது தான் இந்த பூமியில் ராகுவின் சக்தி தான் அதிகமாக இருக்கும்.
★கடவுளுக்கு எதிரான சில விஷயங்களை செய்வதும்.
மிகப்பெரிய அசம்பாவித செயல்களைச் செய்வதும்.சூரிய கிரகணதன்று தான் செய்வார்கள்.ஏனென்றால் சூரிய கிரணத் தன்று எந்த கடவுளுக்கும் சக்தி இருக்காது.
★இதனால்தான் அனைத்து கோயில்கள் இருக்கும் கடவுளின் விக்கிரகங்கள் மூடப்படுகின்றன.
★சூரிய கிரகணதன்று தான் இந்த பூமியில் புதிய கொடிய வைரஸ்கள் உருவாகும்.ஏனென்றால் வைரஸ் ராகு.
★சந்திர கிரகணத்தன்று தான் இந்த பூமியில் புதிய உயிரினங்கள் அல்லது உயிர்கள் புதியதாக ஜனனம் எடுக்கும்.
★இதனால்தான் ராகு கேதுக்கள் இந்த ஜகத்தை ஆளக் கூடிய சக்தி படைத்தவர்கள் என்று சொல்வது.
★இதற்குத்தான் ஜோதிடத்தில் நமது முன்னோர்கள் ராகு கேதுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

Comments

Popular posts from this blog

ஜோதிட உலகத்தில் இருக்கும் "வக்ர கிரகங்கள்" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்..?

  தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.. ★"வக்ர கிரகங்கள்" என்பது நமது ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 5,6,7,8 பாவங்களில் "செவ்வாய், சனி, குரு"இந்த கிரகங்கள் இருந்தால் வக்ரமாக கருதப்படுகிறது. ★சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் 40 டிகிரி இடைவெளி இருந்தால் சுக்கிரன் வக்கரமாகவும், ★சூரியனுக்கும் புதனுக்கும் இடையில் 17 டிகிரி இடைவெளி இருந்தால் புதன் வக்கிரமாகவும் கருதப்படுகிறது. ★வக்கிரமான கிரகங்கள் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயத்தில் நமக்கு விசித்திரமான, வித்தியாசமான, மாற்று சிந்தனை உடைய, நடைமுறைக்கு ஒத்துவராத, வழக்கத்திற்கு மாறான முறையில் நம் மனதில் தோற்றுவிக்கும் மற்றும் நம்மை வழி நடத்தும். ★உதாரணமாக 4ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் வீடு வண்டி, வாகனம், சொத்து, property போன்றவற்றில் நம்மை விசித்திரமாக,வித்தியாசமாக, மாற்று சிந்தனை உடையதாக நம்மை வழி நடத்தும். ★10ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் விசித்திரமான தொழில் வித்தியாசமான தொழில் மாற்று சிந்தனை உடைய தொழில், எல்லோரும் ஒரு மாதிரி தொழில் செய்தால் இவர் அதற்கு நேர்மாறாக ...

*பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!*

  *பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!* 1. தினப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். 2. கணப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் மங்களம் உண்டு. 3. மகேந்திரப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் விருத்தியாகும். 4. ஸ்த்ரீ தீர்க்கம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்க முடியும். சொத்துக்கள் முதலில் தங்கும். 5. யோனி கூடம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவியின் தாம்பத்தியம் ருசிக்கும். 6. ராசிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தி அடைந்து செழிக்கும். 7. ராசி அதிபதிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கரு சீக்கிரத்தில் உண்டாகும். 8. வசியப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பார்கள். 9. ரஜ்ஜுப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கடைசி வரை பெண் சுமங்கலியாக இருப்பாள். 10. வேதை பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் தம்பதிகளுக்கு பெரிய துக்கங்கள் வராமல் காக்கும்.
  *தினமும் வளரும் அதிசய நந்தி கோவில்.* பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக உள்ளது ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்திய நாட்டில் லட்சக்கணக்கில் கோவில்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான பல கோவில்கள் அதிசயத்தக்க சிறப்பம்சங்களும், வரலாறு பின்னனின் கொண்டதாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்த பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இருக்கும் நந்தி சிலையின் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தொல்பொருள் ஆய்வுத் துறையும்கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். ​கோவிலின் வரலாறு இந்த கோவில் வைணவ மரபுகளின்படி கட்டப்பட்டுள்ளது. இது 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்க வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிஹர் புக்க ராய் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் ஐதராபாத்தில் இருந்து 308 கி.மீ தொலைவிலும், விஜயவாடாவிலிருந்து 359 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பண்டைய கால பல்லவர்கள், சோழர்...