Skip to main content

 



" நம்மை நாமே காப்போம்"
வாரீர்
வருகின்ற *26.12.2020 * சனிக்கிழமை *காலபைரவருக்கு* ^ 5 நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி ^ நாமனைவரும் வழிபடும் * 118 வது வாரமாகும்*.
வருகின்ற ^27.12.20 ஞாயிற்றுக்கிழமை^ * சூரியபகவானுக்கு விளக்கேற்றி*
^108 முறை^ அவருடைய *காயத்ரி மந்திரம்* சொல்லி *கோதுமை வழிபாடு* செய்வது ^37 வது வாரமாகும்^.
அதேபோல், அன்றைய தினம், பகவான்
* வீரபத்திரரை * வேண்டி " ஒரு தீபமேற்றி"
* ஓம் வீரபத்ர தேவாய நமோ நமஹ * என 18 முறை சொல்லி வணங்கும் ஞாயிற்றுக்கிழமை 14 வது வாரமாகும்.
மேற்கூறிய மூன்று வழிபாடுகளும், நமக்காக, *சித்தர் வாக்கில்* வெளிப்பட்டு, வெவ்வேறு காரணங்களுக்காக, நாமனைவரும் செய்து, அதன் பலனை, இன்று கண்கூடாக பார்த்து வருகிறோம்.
இதுவரையிலும், பல்வேறு காரணங்களால், நிஜம் எது ? போலி எது? என்று தெரியாமலேயே, சிலருடைய சுய இலாபத்திற்காக நம்மை ஜாதி ரீதியிலும், சிவன் வைஷ்ணவர் என்றும் பிரித்து, நம்மை ஒற்றுமையடைய விடாமலும், சிந்திக்க விடாமலும் தடுத்து, சிதறி, அறியாமையில் கிடந்த நமது சொந்தங்கள் அனைவரும், நிலமையை உணர்ந்து ஒன்றிணைய வேண்டி, *காலபைரவரை* பூஜித்து வருகிறோம்.
அவரின் பெரும் கருணையால், ஜாதி, இன, பேதங்களை மறந்து, அறியாமையால் நமக்கு புரியாமல் இருந்த உண்மைகள் புரியத் தொடங்கி, ஒன்றிணையா விட்டால், நாளைய நமது சந்ததியினர், ஆதரவற்று, நமது நாட்டிலேயே அடிமைகளாக வாழ நேரிடும், என்ற உண்மையினையும் உணர்ந்து, நாமும் 10 சதவீதம் பேர் ஒன்றிணைய தொடங்கி விட்டோம். இதற்கே நம்மை பிரித்து வைத்து ஆதாயம் அடைந்தவர்கள் அலற ஆரம்பித்து விட்டார்கள் என்றால், 50 சதவீதம் பேர் ஒன்றிணைந்தால் என்னவாகும் ? சிந்திப்பீர் மக்களே.
* நமது மதம் ஒரு பெரிய விருட்சம் *.
நமது புனிதமான கலாச்சாரங்கள், பண்பாடுகள், வழிபாடுகள், சமய சடங்குகள், விழாக்கள், பண்டிகைகள் அனைத்தும், *நமது விருட்சத்தின் சல்லி வேர்கள்*. இந்த சல்லி வேர்களை அழித்துவிட்டு நம்மையும் கூண்டோடு அழிக்க எண்ணுகிறார்கள் நமது பகைவர்கள்.
கடந்த ஆண்டு பஞ்சபூதங்களில் ஒன்றான *நீருக்கு* நெல்லையிலே ஏராளமான தடைகளையும் மீறி இந்துக்கள் அனைவரும்
^^தாமிரபரணியில்^^ விழா எடுத்து கொண்டாடி மகிழ்ந்தோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக வருண பகவானின் ஆசியால், மூன்று போகங்கள் விளைந்து, தண்ணீர் தட்டுபாடின்றி, தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கின்றது.
நமது அறியாமையால், நமது விருட்சத்தின் சல்லி வேர்களை, நாமே அழிக்க தொடங்கினோம் பிறரின் அறிவுரைகளை கேட்டு. ஏன் தீபாவளி அன்று குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் வெடித்து மகிழும் பட்டாசுக்குக் கூட தடை. இவைகள் இனிமேலும் சிதைந்து விடாமல் தடுக்க வேண்டி, ஞாயிறுதோறும் *சூரிய பகவான்* வழிபாட்டினை தொடங்கினோம். கடந்த 36 வாரங்களாக, நாம் தொடர்ந்து வழிபட்டதன் பலனை, இன்று நாம் அனுபவித்து கொண்டு இருக்கிறோம்.
அவரின் பெரும் கருணையால், ஆன்ம பலம், மற்றும் ஒளி பொருந்திய பலர், நமது கலாச்சாரத்தை, பண்பாட்டினை, வழிபாடுகளை, தவறாக விமர்சனம் செய்வோருக்கு எதிராக, ஆதாரங்களுடன் குரல் கொடுக்க தொடங்கி விட்டனர். இதற்கு முன்பாக, யார் என்ன சொன்னாலும் நமக்கென்ன? , என்று இருந்த காலம் மாறி, ஒருவருக்கு பத்து பேர் என்று கணக்கில்லாமல், ஏராளமானோர் பதில் கொடுக்க சூரிய பகவான் தயார் படுத்தி விட்டார்.
இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, தலைமை தாங்கி செயல்பட, மகாபாரதத்தில் கிருஷ்ண பகவானை போல, நம்முள் ஒருவர் தோன்றி, தலைமை பண்புடன் வழிநடத்தி, நாமெல்லாம் வெற்றியை ருசிக்கும் காலத்தை அருளுவார். .
நமக்காக துணிந்து, பலவிதமான இன்னல்களையும் பொருட்படுத்தாமல், குரல் கொடுப்பவர்களுக்காகவும், இனி மேலும் குரல் கொடுக்க வருபவர்களுக்காகவும், நமக்காகவும், பாதுகாப்பு வேண்டும் என்று வேண்டி , *வீரபத்திரரை* 55 நாட்கள் தூய, மற்றும் கடினமான, விரதங்கள் இருந்து , தொடர்ந்து 47 நாட்கள், ஒருநாள் இருவர் என, ஆறுவேளைகளாக வேண்டி, செய்யப்பட்ட பூஜை செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி நிறைவுற்றது.
சிவபெருமானை பகைத்துக் கொண்டு, சிவனாருக்கான ஆகுதிகளையும் வழங்க மறுத்து, நான் எனும் பெரும் அகங்காரத்துடன் செய்ய இருந்த,
* தட்சனின் * யாகத்தை தடுத்து நிறுத்த, *ஈசனின் கோபக்கனலில் தோன்றியவரே வீரபத்திரர்* ஆவார்.
வீரபத்திரரும், தட்சனை அழித்து, தவறான யாகத்தையும் தடுத்து நிறுத்தியவர், என்பது உங்களுக்கே தெரியும். அவரையே தற்போது நாம் சரணடைந்து, ஒவ்வொரு ஞாயிறன்றும், சூரிய பகவான் பூஜையின் போதே, வீரபத்திரருக்காக ஒரு தீபமேற்றி வைத்து, *ஓம் வீரபத்திரர் தேவாய நமோ நமஹ* என்று 18 முறை சொல்லி, வணங்கி வருவது . இந்த வாரம் அது 14 வது வாரமாகும்.
இந்த மூன்று பூஜைகளுமே, நமக்காக, நமது. எதிர்கால சந்ததியினரை காப்பாற்ற *சித்தர் வாக்கில் அருளப் பெற்றதே* ஆகும். *சித்தர் வாக்கு என்பது சிவன் வாக்கு* என்பார்கள்.
இனிமேல் காலபைரவரும், சூரிய பகவானும், வீரபத்திரர் பெருமானும், நம் எல்லோருக்கும், நல்ல பக்கபலமாக இருந்து, நல்ல சூழ்நிலைகளை நமக்காக அருளுவார்கள் என்பது திண்ணம்.
நமது சொந்தங்கள் ஒவ்வொருவரும், தினசரி, தனது நண்பர்களிடமோ, அல்லது உற்றார் உறவினர்களிடமோ, ஒரு நபர் வீதம், அவர்களிடம் தேவையற்ற வீண் பேச்சுக்களைக் குறைத்து, நமது கலாச்சாரங்கள், பண்பாடுகள், வழிபாடுகள், பூஜை முறைகள், ஆங்காங்கே ஆலயங்களில் நடக்கும் நல்ல விஷயங்களோடு, நமது சித்தர் பெருமான் அருள் வாக்கில் உதிர்த்த மேற்கூறிய பூஜை விவரங்களை அவர்களுக்கு புரியும் வகையில் , இன்றிலிருந்து, பேசத் தொடங்கி பாருங்கள். இது எவ்வளவு பெரிய மாற்றங்களை நமக்கு கொடுக்கும் என்பதனை அனுபவபூர்வமாக அனுபவித்துப் பார்க்கலாம்.
நாம், நமது வருங்கால சந்ததியினரை, மற்றவர்களிடம், அடிமை வாழ்வு வாழ வைக்க விரும்புகிறோமா ? இல்லை மானத்தோடும், மரியாதையுடனும், சுய மரியாதையோடும், பிறர் மதிக்க தக்க வகையில், நல்வாழ்வு வாழ வேண்டும். என்று விரும்புகிறோமா ?
நாம் அனைவரும், காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து, ஒன்றிணைந்து செயல்பட தவறினால், நாம் நமது சந்ததியினருக்கு, பெரிய துரோகத்தை செய்ய தயாராகி விட்டோம் என்பதனை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.
யுகங்கள் தோறும், அதர்மங்கள் தலை தூக்கி, தர்மங்கள் நசுக்கப் படும்போது, நான், அக்காலத்தில் தர்மத்தை நிலைநாட்ட, மானுடனாக அவதார பிறப்பெடுத்து வருவேன், என்று பகவத்கீதையில் அர்ஜுனனிடம் *கிருஷ்ண பகவான் * கூறுகிறார்.
அவ்வாறே இக்கால சூழலில், மனுதர்மத்தை மீட்டு எடுக்க,
*சூரிய பகவானால்,*
^ஆன்ம ஒளி பொருந்திய^,
°புது சக்தியுடன் கூடிய,° நூற்று கணக்கானோர் களத்தில் இறங்கி விட்டார்கள்.
மானமிக்க, உணர்ச்சிமிக்க, இன்னும் ஏராளமான பல தலைவர்கள் தோன்றி செயல்பட்டாலும், இவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து வழிநடத்தி செல்லும் *ஒரு ஒப்பற்ற தலைவன்* அவர்களில் உருவெடுத்து, நம்மை எல்லாம் காத்து, அருமையாக வழிநடத்தி செல்வான் என்று நம்புவோமாக.
மேலும், நம் அனைவரும் எதிர்நோக்கும், நல்ல வாழ்வினை, வெகு விரைவில்
*கால பைரவரும் *, *சூரியபகவானும்* *வீரபத்திரரும்* சேர்ந்து நமக்கு அருளுவார்கள்
.இன்னும் * கால பைரவருக்கு * சனிக்கிழமை தோறும் விளக்கேற்றி வணங்குவதன் மூலமும் , *சூரியபகவானுக்கு* மற்றும் *வீரபத்திரர் பெருமானுக்காகவும்* ஞாயிற்றுக்கிழமை தோறும் வீட்டில் பூஜைகள் செய்து வணங்குவதன் மூலமும், நாம் தெளிவான முன்னேற்றத்தை அடையலாம் என்பதனை நாம் அனைவரும் கண்கூடாகவும், பரிபூரணமாகவும் வெகுவிரைவில் உணரலாம் , இயற்கையே, நமக்கு அதை அமைத்து கொடுக்கும்.
இதுவரையிலும், மேற்கூறிய பூஜைகள், யாராவது செய்யாமல் இருந்தால், இந்த வாரம் முதலாவது செய்யத் தொடங்குங்கள்.
நமது இந்து சொந்தங்கள் , அனைவரும் என்ன எண்ணுகிறோம் என்பதனை, நாம் அனைவரும் அறிந்ததே.
நம்மிடம் கடுகளவும் ஒற்றுமை இல்லை.
நல்ல சிந்தனைகள் இல்லை,
எது சரி ? எது தவறு ? என்று புரிந்து கொள்ளும் ஆற்றல் துளியும் இல்லை.
எது சொன்னாலும் , அதன் உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை, எள்ளளவும் இல்லவே இல்லை.
ஆகவே, நாம் அனைவரும் ஒன்று சேராமல் பிரிந்தே இருக்கிறோம்.
நம் அனைவரையும் இணைக்க இறைவனால் மட்டுமே முடியும் என நம்புவோம்.
நாமனைவரும் எளிமையானவர்கள்,
நமக்கு பக்க பலமாக நிற்க எந்த இயக்கமோ, உதவி செய்ய தலைவர்களோ, யாரும் இல்லை.
ஆனால், நம்மூலம் பலனடைந்து, அதிகாரம் செய்யும் பல தலைவர்களும், முகமூடி பெயர்களை வைத்துக் கொண்டு, நம்மவர்களை போலவே , நம்முள் தோன்றி, நம் வழிபாட்டையே கேலியும் கிண்டலும் பேசி, நம்முடைய வழிபாட்டு முறைகளையே சிதைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஏன் என்று ஒரு கேள்வி கூட , அவர்களை நோக்கி கேட்கும் ஆற்றல் நமக்கு யாருக்கும் இல்லை.
நீயே கதி பரந்தாமா !!!
என்று முதலையின் வாயில் சிக்கிய கஜேந்திரன் அழைத்த போது ,
பரம் பொருளே, இறங்கி வந்து காப்பாற்றிய நிகழ்வையும் நாமறிவோம்.
இப்போது வலிமையற்ற நிலையில், ஆங்காங்கே பிரிந்து கிடக்கும் நாம், இதே போல் இறைவனை சரணடைந்து, காப்பாற்றும் படி வேண்டிக் கொள்வதை தவிர, வேறு வழியே இல்லை.
இதற்காக நாம் அனைவரும் செய்ய வேண்டியது,
முக்காலத்திற்கும், தலைவனாக விளங்கும் , காலச் சக்கரத்தின் அதிபதியான, "கால பைரவரை" சரணடைவதுதான்.
" ஆகவே ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை இராகு கால நேரத்தில்
( காலை மணி 9---10.30 )
பஞ்ச பூதங்களை வேண்டி
5 ( ஐந்து ) நல்லெண்ணெய் (தீபம்) விளக்குகளை அவர் முன் ஏற்றி, பரிபூரணமாக உங்களை சரணடைகிறோம்.
எங்கள் வழிபாடுகள் தொடர்ந்து நடக்கவும், மற்ற சக்திகளால் எங்களுக்கு எந்த பிரச்சினைகளும் எழா வண்ணமும், நீரே உற்ற துணையாக இருந்து, எதிர்காலத்தில், வலிமையான, வளமையான, நம் வழிபாட்டு முறைகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெற, அருள் புரியுங்கள் என்று, தூய மனதுடன் பிரார்த்தனை செய்து கொள்வது நலம்.
இதனால் காலத்தின் தலைவன், பஞ்சை நூலாக்கி , நூலை ஆடையாக்கி, தருவது போல, நம் மென்மையான இன மக்களை ஒன்று சேர்த்து, பஞ்ச பூதங்களான இயற்கையின் ஆற்றலால் வழிபாடுகள் தொடர்ந்து நடக்க ஆசிபுரிவார்.
இதை, மிகுந்த நம்பிக்கையோடு நமது இனத்தவர்கள் அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டுகிறோம்.
இதை நம்முடைய சந்ததிகளுக்கும் விளக்கமாக கூறி, அவர்களையும் விளக்கேற்றும் படி செய்யுங்கள். எதிர்கால மாற்றத்தை விரைந்து காணுங்கள்.
நீங்கள் இந்த நல்ல விஷயத்தை மூன்று பேருக்கு சொல்ல, அவர்கள் அடுத்த மூன்று பேருக்கு சொல்ல, இப்படி போனால் இந்த செய்தி கோடிக்கணக்கான நம்மினத்தவரிடம் போய் சேர்ந்து, நாம் அனைவரும் ஒன்றிணைய " கால பைரவர்" நமக்கு கண்டிப்பாக துணை நிற்பார்.
அந்த முதல் ஆளாக நீங்கள் இருக்க வேண்டாமா ? சிந்தியுங்கள்.
நாம் தொடங்கும் போது, கால பைரவரின் அருளால், உலகமே மாற்றத்தை உணரும்.....

Comments

Popular posts from this blog

ஜோதிட உலகத்தில் இருக்கும் "வக்ர கிரகங்கள்" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்..?

  தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.. ★"வக்ர கிரகங்கள்" என்பது நமது ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 5,6,7,8 பாவங்களில் "செவ்வாய், சனி, குரு"இந்த கிரகங்கள் இருந்தால் வக்ரமாக கருதப்படுகிறது. ★சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் 40 டிகிரி இடைவெளி இருந்தால் சுக்கிரன் வக்கரமாகவும், ★சூரியனுக்கும் புதனுக்கும் இடையில் 17 டிகிரி இடைவெளி இருந்தால் புதன் வக்கிரமாகவும் கருதப்படுகிறது. ★வக்கிரமான கிரகங்கள் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயத்தில் நமக்கு விசித்திரமான, வித்தியாசமான, மாற்று சிந்தனை உடைய, நடைமுறைக்கு ஒத்துவராத, வழக்கத்திற்கு மாறான முறையில் நம் மனதில் தோற்றுவிக்கும் மற்றும் நம்மை வழி நடத்தும். ★உதாரணமாக 4ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் வீடு வண்டி, வாகனம், சொத்து, property போன்றவற்றில் நம்மை விசித்திரமாக,வித்தியாசமாக, மாற்று சிந்தனை உடையதாக நம்மை வழி நடத்தும். ★10ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் விசித்திரமான தொழில் வித்தியாசமான தொழில் மாற்று சிந்தனை உடைய தொழில், எல்லோரும் ஒரு மாதிரி தொழில் செய்தால் இவர் அதற்கு நேர்மாறாக ...

*பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!*

  *பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!* 1. தினப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். 2. கணப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் மங்களம் உண்டு. 3. மகேந்திரப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் விருத்தியாகும். 4. ஸ்த்ரீ தீர்க்கம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்க முடியும். சொத்துக்கள் முதலில் தங்கும். 5. யோனி கூடம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவியின் தாம்பத்தியம் ருசிக்கும். 6. ராசிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தி அடைந்து செழிக்கும். 7. ராசி அதிபதிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கரு சீக்கிரத்தில் உண்டாகும். 8. வசியப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பார்கள். 9. ரஜ்ஜுப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கடைசி வரை பெண் சுமங்கலியாக இருப்பாள். 10. வேதை பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் தம்பதிகளுக்கு பெரிய துக்கங்கள் வராமல் காக்கும்.
  *தினமும் வளரும் அதிசய நந்தி கோவில்.* பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக உள்ளது ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்திய நாட்டில் லட்சக்கணக்கில் கோவில்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான பல கோவில்கள் அதிசயத்தக்க சிறப்பம்சங்களும், வரலாறு பின்னனின் கொண்டதாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்த பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இருக்கும் நந்தி சிலையின் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தொல்பொருள் ஆய்வுத் துறையும்கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். ​கோவிலின் வரலாறு இந்த கோவில் வைணவ மரபுகளின்படி கட்டப்பட்டுள்ளது. இது 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்க வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிஹர் புக்க ராய் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் ஐதராபாத்தில் இருந்து 308 கி.மீ தொலைவிலும், விஜயவாடாவிலிருந்து 359 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பண்டைய கால பல்லவர்கள், சோழர்...