Skip to main content

புத்திசாலிகளின் அடையாளங்கள்..



 இரவில் நீங்கள் வெகுநேரம் விழிப்பீர்களா.....அப்போ நீங்க ஒரு புத்திசாலிதான்..?

புத்திசாலி மனிதர்கள் தம் அனைத்தையும் அறிந்தவர்கள் என்ற எண்ணம் கொள்ள மாட்டார்கள். ஆனால் சாதாரண மனிதர்கள் புத்திசாலியாக தங்களைநினைத்துக் கொள்வார்கள்."டெய்னிங் க்ரூஜர்" எனும் ஆய்வு இதை உறுதிப்படுத்துகிறது. நகைச்சுவை, இலக்கணம், தர்க்கம் போன்ற நான்கு வகையான துறைகளில் கேள்விகள் கேட்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டது.
சாதாரண மனிதர்கள் 12% மதிப்பெண் எடுத்தாலும் அவர்கள் 62% மதிப்பெண் எடுத்து இருக்கலாம் என சராசரியாக நினைத்தார்கள்.
புத்திசாலி மனிதர்கள் சரியான கருத்துகளுடன் தங்கள் கூற்றை நிரூபிப்பார்கள் அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உறவுகள் பாதிக்கப்படாமல் அதேசமயம் கருத்துக்களையும் ஆணித்தனமாக சொல்வதில் புத்திசாலி மனிதர்கள் வெற்றியடைவார்கள். நரம்பியலாளர் Jason s. Moser என்பவர் கூறுகையில்'புத்திசாலி' மனிதர்களின் மூளை மற்றவர்களின் தவறுகளின் போது வித்தியாசமாக செயற்படுவதை கண்டுபிடித்தார்.
புத்திசாலி மனிதர்கள் தனிமையில் இருப்பதை அதிகம் விரும்புவார்கள். அதனால் மகிழ்ச்சியும் அடைவர். LSE மற்றும் Singapore management University என்ற நிறுவனம் 15000 மக்கள் 18-28 வயதுக்குட்பட்டவர்களுக்கு சோதனை நடத்தினார்கள். இதில் கூடுதலான மற்றும் குறைவான புள்ளிகளை எடுத்தவர்கள் மனித செரிவு அதாவது மக்கள்தொகை கூடிய பகுதிகளில் வாழ்வது மகிழ்ச்சி அற்றது. புத்திசாலித்தனத்தை பாதிக்கக்கூடியது போன்று கருதினார்கள். அதிக அறிவார்ந்த நபர்கள் அதிக நண்பர்களுடன் பேசுவது பழகுவது என்பதில் பெரும்பாலும் திருப்தி காண மாட்டார்கள்.
புத்திசாலி மனிதர்கள் சிறிது உடல் சோம்பேறித்தனத்துடன் இருப்பர் இவர்களின் புத்தி வேலை செய்யும்போது உடல் இயக்கம் குறையும் ஆனால் சாதாரண மனிதர்கள் புத்திக்காக செலவிடும் நேரம் சக்தி ஆகியவற்றை உடல் உழைப்பில் காட்டுவார்கள். புத்திசாலி மனிதர்களின் ஆழமான சிந்தனை உடல் இயக்கத்தை தடை செய்கிறது எனவே எமக்கு சோம்பேறித்தனமாக இருப்பது போலத் தெரியலாம்.
புத்திசாலி மனிதர்கள் தங்களது நேரத்தை வித்தியாசமான தலைப்புகளை வாசித்து தங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்வதில் செலவிடுவார்கள். இவர்கள் இந்த தலைப்பில் நீங்கள் கேட்டாலும் சொல்லித்தருவதற்கு தரவுகளை சேர்த் வைத்திருப்பார்கள். எதைப்பற்றியும் பேச முடியுமான தைரியத்தில் இருப்பார்கள்.
புத்திசாலி மனிதர்கள் அதிகம் இன்டர்நெட் பாவித்து தகவல்களை அறிந்து கொள்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு ஆன்லைன் சர்வேயில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இன்டர்நெட் மூலம் தமது அறிவை வளர்த்துக் கொள்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களது வாசிப்பு மற்றும் எழுத்து திறமைகள் மேம்படுவது தெரிகிறது.
புத்திசாலி மனிதர்கள் இரவில் விழிப்புடனும் மூளை செயல்திறன் கூடுதலாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதர்கள் பகலுடன் தங்கள் வேலைகளை மட்டுப்படுத்தி முடித்துக்கொள்ள முற்படுகிறார்கள் என ராபர்ட் எலிசன் என்று விலங்கியல் நிபுணர் ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடித்து தெரிவித்துள்ளார். இவர் குறிப்பிட்ட ஒரு குழுவை "காலை உணர்வுடையவர்" "மாலை உணர்வுடையவர்" என இரண்டாகப் பிரித்து மேற்குறித்த ஆய்வு மேற்கொண்டார்.
புத்திசாலி மனிதர்கள் அதிகம் இலத்திரனியல் உபகரணங்கள் (கையடக்கத் தொலைபேசி, தொலைக்காட்சி, வானொலி) போன்றவைகளை அதிகம் உபயோகிக்க ஆர்வமாக உள்ளனர். ஏனெனில் அதில் வரும் தகவல்களை தெரிந்து கொள்ளவே... ஹெவல் பெக்கார்ட் என்ற ஒரு கல்வியாளர் கூறுகையில் "இது ஒரு தகவல் அறியும் நோய் (infomania) இதற்குக் காரணம் அறிவுப்பசி ஆகும். இது வேலை பார்ப்பவர்களின் வேலைகளையும் பாதிக்கிறது. மெசேஜ்கள் அறிவது ஈமெயில்களை சரி பார்ப்பது போன்ற வேலைகளால் அலுவலக வேலைகளும் குடும்பத்தின் கடமைகளும் பாதிக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.
புத்திசாலி மனிதர்கள் திறந்த அறிவு உள்ளவர்களாகவும், சந்தர்ப்பத்தை புரிந்து கொள்பவர்களாக வும் இருப்பார்கள். இது இவர்களை சமூகத்தில் ஊடறுத்து பழகுவதில் எளிமையை ஏற்படுத்தும். 'Encyclopaedia Britannica' என்ற நூலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சூழலில் மாற்றம் ஏற்பட்டு முற்றிலும் புதியவை கண்டுபிடிப்பதற்கு ஏற்றதாக உள்ளது.
புத்திசாலி மனிதர்கள் புதிய புதிய கேள்விகளைக் கேட்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள். இதனால் புதியவற்றை அறிந்து கொண்டே இருப்பார்கள். ஆர்வத்தை தூண்டும் புதிய புதிய விஷயங்களில் இருந்து கேள்வி எழுப்புவார்கள். இது அவர்களின் மூளை அமைப்புக்கேற்றவாறு அமைந்திருக்கும். மேலும் பிழைகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள்.
உங்களுக்குத் தெரிந்த புத்திசாலி நண்பர்கள் இருந்தால் மேற்கூறிய பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லது நீங்களே புத்திசாலியாக இருந்தால் உங்களைப் பற்றி மற்றவர்கள் அறிய பகிர்ந்து கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

ஜோதிட உலகத்தில் இருக்கும் "வக்ர கிரகங்கள்" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்..?

  தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.. ★"வக்ர கிரகங்கள்" என்பது நமது ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 5,6,7,8 பாவங்களில் "செவ்வாய், சனி, குரு"இந்த கிரகங்கள் இருந்தால் வக்ரமாக கருதப்படுகிறது. ★சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் 40 டிகிரி இடைவெளி இருந்தால் சுக்கிரன் வக்கரமாகவும், ★சூரியனுக்கும் புதனுக்கும் இடையில் 17 டிகிரி இடைவெளி இருந்தால் புதன் வக்கிரமாகவும் கருதப்படுகிறது. ★வக்கிரமான கிரகங்கள் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயத்தில் நமக்கு விசித்திரமான, வித்தியாசமான, மாற்று சிந்தனை உடைய, நடைமுறைக்கு ஒத்துவராத, வழக்கத்திற்கு மாறான முறையில் நம் மனதில் தோற்றுவிக்கும் மற்றும் நம்மை வழி நடத்தும். ★உதாரணமாக 4ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் வீடு வண்டி, வாகனம், சொத்து, property போன்றவற்றில் நம்மை விசித்திரமாக,வித்தியாசமாக, மாற்று சிந்தனை உடையதாக நம்மை வழி நடத்தும். ★10ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் விசித்திரமான தொழில் வித்தியாசமான தொழில் மாற்று சிந்தனை உடைய தொழில், எல்லோரும் ஒரு மாதிரி தொழில் செய்தால் இவர் அதற்கு நேர்மாறாக ...

*பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!*

  *பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!* 1. தினப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். 2. கணப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் மங்களம் உண்டு. 3. மகேந்திரப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் விருத்தியாகும். 4. ஸ்த்ரீ தீர்க்கம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்க முடியும். சொத்துக்கள் முதலில் தங்கும். 5. யோனி கூடம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவியின் தாம்பத்தியம் ருசிக்கும். 6. ராசிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தி அடைந்து செழிக்கும். 7. ராசி அதிபதிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கரு சீக்கிரத்தில் உண்டாகும். 8. வசியப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பார்கள். 9. ரஜ்ஜுப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கடைசி வரை பெண் சுமங்கலியாக இருப்பாள். 10. வேதை பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் தம்பதிகளுக்கு பெரிய துக்கங்கள் வராமல் காக்கும்.
  *தினமும் வளரும் அதிசய நந்தி கோவில்.* பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக உள்ளது ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்திய நாட்டில் லட்சக்கணக்கில் கோவில்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான பல கோவில்கள் அதிசயத்தக்க சிறப்பம்சங்களும், வரலாறு பின்னனின் கொண்டதாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்த பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இருக்கும் நந்தி சிலையின் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தொல்பொருள் ஆய்வுத் துறையும்கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். ​கோவிலின் வரலாறு இந்த கோவில் வைணவ மரபுகளின்படி கட்டப்பட்டுள்ளது. இது 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்க வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிஹர் புக்க ராய் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் ஐதராபாத்தில் இருந்து 308 கி.மீ தொலைவிலும், விஜயவாடாவிலிருந்து 359 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பண்டைய கால பல்லவர்கள், சோழர்...