Skip to main content

சனி பெயர்ச்சி ஸ்பெஷல் ..




 சனி பகவான்

சனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்.
சனீஸ்வரர் கைலாயத்திற்கு சென்று சிவபெ ருமானிடம் உங்கள் ஜாதகப்படி "ஏழரைநாட்டு ச்சனி" வர இருக்கிறது, மிகக்கவனமாக இருங்கள் பிரபு" என்றார்..
மேலும் "பூலோகத்தில் உள்ள மனிதர்கள் தங்க ள் ஜாதகத்தை பார்த்து தங்களுக்கு ஏழரைநா ட்டுச்சனி வருவதை கணித்துக் கொள்கின்ற னர்.. தாங்களோ இறைவன், இதனால் உங்க ளுக்கு தெரிவித்துப் போக வந்தேன்" எனக் கூறிச் சென்றார்!
உடனே நாரதர், "இந்த சனீஸ்வரனுக்கு எவ்வ ளவு அகந்தை?," "உலகத்திற்கெல்லாம் படிய ளக்கும் பரமேஸ்வரனையே எச்சரிக்கிறாரே?, இவரை என்ன செய்யலாம்?" என கேட்டார்..
சனீஸ்வரனின் கூற்றை பொய்யாக்க ஈசன் ஒரு உபாயத்தை கையாண்டார் கைலாயத்தை விட்டுவிட்டு, ஒரு காட்டிற்குள் சென்று ஒரு புற்றுக்குள் யாருக்கும் தெரியாமல் ஒழிந்து கொண்டார்..
பின்னர் ஏழரை ஆண்டுகள் கழித்து, புற்றுக் குள் இருந்து வெளியேறி கைலாயம் சென்றார் சிவபெருமான்!
சில நாட்களுக்கு பிறகு சிவபெருமானை தரிசிக்கச் சென்றார் சனீஸ்வரன்.. அப்போது இறைவன், "சனீஸ்வரா, எனக்கு ஏழரைச்சனி கஷ்டத்தை கொடுக்கும் என்றாயே?, எனக்கு எந்தப்பாதிப்பும் வரவில்லையே"? என்றார் சிவபெருமான்.
அதற்கு சனிபகவான், "இறைவா மன்னிக்கவு ம், " ஒரு மனிதனுக்கு, தன் அருமைக்குழந்தை கள், மனைவியை விட்டுவிட்டு, ஏழரை ஆண்டு கள் தனிமைச்சிறையில் கிடப்பது போன்ற கஷ்டம் ஏதுமில்லை.." "தாங்கள் என் ஏழரை க்கு பயந்து, கோடிக்கணக்கான சேவகர்களை விட்டுவிட்டு, தனிமைச்சிறையில் புற்றில் கிடந்தீர்களே.?". "இதைவிட பாதிப்பு ஏதாவது உண்டா?" எனக்கேட்டார்!
அதற்கு சிவபெருமான் சிரித்து, இறைவனே என்றாலும் தனது கடமையை சரியாகச் செய்த , சனீஸ்வரனின் நேர்மையை பாராட்டி ஆசி வழங்கினார்.
நவக்கிரகங்களில் சனி மட்டுமே ஈஸ்வரபட்டம் பெற்றவர்.. நியாதிபதி! ஒருவர் செய்யும் பாவ ங்களின் பலன் ஏழரைச்சனியில் கிடைக்கிறது அல்லது சனியின் தொடர்புள்ள தசாபுக்தி வரும்போது தண்டனை கிடைக்கிறது.. கால அளவுகள் மாறலாம்!
ஒருவருக்கு ஏழரைச்சனி வரும்போது நிறைய கஷ்டங்களும், அதனால் நிறைய அனுபவங்க ளும் கிடைக்கிறது.. நமக்கு கஷ்டம்வரும் போ தே நமது உண்மையான உறவினர்கள் யார்?, நண்பர்கள் யார்?, பணமில்லை என்றால் நமது நிலைமை என்ன? போன்ற ஞானம் கிடைக்கு ம் சனீஸ்வரன் தரும் கஷ்டத்தை ரசித்து அனுப விக்க வேண்டும்!சனீஸ்வரரின் பாதிப்புமுடியு ம் போது, பிரகாசமான எதிர்காலத்திற்கு வழி ஏற்ப்படுத்திவிட்டுச் செல்வார்.
எல்லோருக்கும் கெட்டகாலம் என்றுஒன்று உள்ளது போல நல்லகாலம் என்று ஒன்று உண்டு.. அதுவரை காத்திருக்க வேண்டும்!
பழந்தமிழர்கள் "நாளும்கோளும் அறிந்து, காரியம் செய்யவேண்டும்" என்று கூறுவார்க ள் எல்லாவற்றிர்கும் நேரம் காலம் என்று ஒன்று உண்டு!
எந்த வேலையையும் நாளை செய்து கொள்ள லாம் என்ற சோம்பேறிகள், ஆடம்பர செலவா ளிகள், அதிகாலையில் எழாதவர்கள், கால்க ளை சுத்தமாக கழுவாத சோம்பேறிகள், பகலி ல், அந்தி கருக்கலில் உறங்குபவர்கள், வீணா ன பேச்சுடையவர்கள், புறங்கூறுபவர்கள், வாய்ச்சவடால் பேசுபவர்கள், தினமும் வேலை க் குச் செல்லாத சோம்பேறிகள், இரவில் தாமதமாக உறங்கும் பழக்கம் கொண்டவர்கள்,
வீணாக கடன்வாங்கி ஆடம்பர செலவு செய்ப வர்கள் ஆகியோருக்கு சனியின் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும்.
சனீஸ்வரரின் தீவிர பாதிப்பை குறைக்க, சனி க்கிழமை நல்லெண்ணை தேய்த்து குளிக்க வேண்டும், கருப்பு அல்லது நீலநிறம் வரும்படி யான ஆடை அணியவேண்டும், அசைவம் உண்ணக்கூடாது, எள் சம்மந்தமான பொரு ட்கள் தானம் செய்ய வேண்டும், காக்கைக்கு உணவளிக்க வேண்டும்
திருக்கோவில்களுக்குச் சென்று நீராஞ்சனம் வழிபாடு செய்யவேண்டும்....

அதோடு ..

சனிக்கிரக தோஷம் நீக்கும் சனைச்சர ஸ்தோத்திரம்🙏... தசரதர் அருளிய துதிப்பாடல்... தசரதர் அருளிய சனீஸ்வர ஸ்லோகம்! ஒரு முறை தசரத சக்ரவர்த்தியை சந்தித்த அவரின் ஜோதிடர்கள், ‘`சனி பகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்து ரோஹிணி நட்சத்திரத்தில், சகடத்தை உடைத்து சஞ்சாரம் செய்யப் போகிறார். இதனால் 12 வருட காலம் கடும் பஞ்சம் உண்டாகும். சகல லோகங்களும் அழியும் நிலை ஏற்படும்!’’ என்றனர். தசரதர் மிகவும் கவலை அடைந்தார். உடனடியாக வசிஷ்ட முனிவரிடம் சென்று விஷயத்தை விளக்கினார். அவரும் ஜோதிடர்கள் கூறியதை ஆமோதித்தார். இதனால் தசரதரின் கவலை பன்மடங்கு அதிகரித்தது. ‘`நாட்டில் பஞ்சம் நேராமல் தடுக்க- உலகைக்காக்க வழியே இல்லையா?’’- -எனக் கேட்டார் தசரதர். ‘`இல்லை மன்னா... இதைத் தவிர்க்க முடியாது!’’ பதிலளித்தார் வசிஷ்டர். இதைக் கேட்டு கலக்கம் அடைந்தார் தசரதர். ஊன்- உறக்கம் இன்றி சிந்தனையில் ஆழ்ந்தவர், இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார். தனது ரதத்தில் ஏறி பல்லாயிரக் கணக்கான மைல் தொலைவு வரை பயணித்தார். தான் எதிர்பார்த்த ஓர் இலக்கை அடைந்ததும் தமது வில்லில் நாண் ஏற்றி, ‘ஸம்ஹார அஸ்திர’த்தை சனி பகவான் மீது பிரயோகிக்கத் தயாரானார். இந்த நிலையில், சனி பகவான் கார்த்திகையில் இருந்து ரோஹிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் தருணம் நெருங்கியது. அப்போது, அஸ்திரத்துடன் தசரதர் நிற்பதைப் பார்த்த சனி பகவான், ‘`தசரதரே! தேவர்களையும் நடுங்கச் செய்யும் உனது பராக்கிரமம் வியக்க வைக்கிறது. அஸ்திரத்தைப் பிரயோகிக்க வேண்டாம். வேண்டும் வரம் அளிக்க சித்தமாக உள்ளேன். என்ன வேண்டும், கேள்!’’ என்றார். இதைக்கேட்டு சற்று நிம்மதி அடைந்தார் தசரதர். அவர், சனி பகவானிடம் தனது வேண்டுதல்களை வைத்தார் ‘`சூரிய புத்திரரே! இன்று முதல் எனது நாட்டு மக்கள் எவரையும் நீங்கள் துன்புறுத்தக் கூடாது. மேலும் தாங்கள் ரோஹிணி நட்சத்திரத்தைப் பிளந்து கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். அத்துடன், சூரிய- சந்திரர்கள் இருக்கும் வரை பூமியில்... நதி உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு போகவோ, 12 வருட கால வறட்சி ஏற்படுவதோ கூடாது. இந்த வரங்களைத் தந்தருள வேண்டும்!’’ என்று வணங்கினார். அதன்படியே வரம் அளித்தார் சனி பகவான். உடனே தசரதர், சரஸ்வதி மற்றும் விநாயகரை தியானித்து, சனி பகவான் குறித்து ஸ்தோத்திரம் இயற்றினார். அதுவே தசரதர் இயற்றிய ஸ்தோத்திரம்... 🙏தசரதர் அருளிய சனீஸ்வரர் ஸ்லோகம் உங்களுக்காக: நம: க்ருஷ்ணாய நீலாய சிதிகண்ட நிபாய ச நமோ நீலமயூகாய நீலோத்பல நிபாயச நமோ நிர்மாம்ஸ தேஹாய தீர்க்க ச்ருதிஜடாய ச நமோ விசால நேத்ராய சுஷ்கோதர பயாநக நம: பௌருஷகாத்ராய ஸ்தூலரோம்ணே ச தே நம: நமோ நித்யம் க்ஷுதார்த்தாய ஹ்யத்ருப்தாய ச தே நம: நமோ கோராய ரௌத்ராய பீஷணாய கராளிநே நமோ தீர்க்காய சுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்து தே நமஸ்தே கோரரூபாய துர்நிரீக்ஷ்யாய தே நம: நமஸ்தே ஸர்வபக்ஷாய வலீமுக நமோஸ்து தே ஸூர்யபுத்ர நமஸ்தேஸ்து பாஸ்கரே பயதாயிநே அதோ த்ருஷ்டே நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்து தே நமோ மந்தகதே துப்யம் நிஷ்ப்ரபாய நமோ நம: தபநாஜ்ஜாத தேஹாய நித்யயோகதராய ச ஜ்ஞாநசக்ஷுர் நமஸ்தேஸ்து காஸ்யபாத்மஜ ஸூநவே துஷ்டோ ததாஸி ராஜ்யம் த்வம் க்ருத்தோ ஹரஸி தத்க்ஷணாத் தேவாஸுர மநுஷ்யாஸ்ச ஸித்த வித்யாதரோரகா: த்வயாவலோகிதா: ஸர்வே தைந்யமாசு வ்ரஜந்தி தே ப்ரஹ்மா சக்ரோ யமஸ்சைவ முநய: ஸப்த தாரகா: ராஜ்யப்ரஷ்டா: பதந்தீஹ தவ த்ருஷ்ட்யாவலோகிதா: த்வயா வலோகிதாஸ்தேபி நாசம் யாந்தி ஸமூலத: ப்ரஸாதம் குரு மே ஸௌரே ப்ரணத்யா ஹி த்வமர்த்தித: தசரதரின் இந்த துதியைக் கேட்டதும் உள்ளம் பூரித்தார் சனி பகவான். ‘`உமது ஸ்லோகத்தால் பெரிதும் மகிழ்ந்தேன். ஆகவே, கொடுக்கக் கூடாத வரத்தை உனக்கு அளிக்கிறேன். ஒருவன், இந்த ஸ்லோகத்தை ஒரு முறையோ அல்லது இரு முறையோ சொல்லி இருந்தாலும்கூட, அவனை துன்புறுத்துவதை விட்டு விடுகிறேன். ஒருவனது ஜாதகத்தில், அஷ்டமத்திலோ ஜன்ம லக்னத் திலோ நான் இருந்தால், அவன் கர்ம சிரத்தையுடன் ஸ்நானம் செய்து, இரும்பால் செய்யப்பட்ட எனது வடிவத்தை அரச இலையால் அர்ச்சனை செய்து, எள் கலந்த உளுந்து அன்னம், இரும்புப் பொருள், தட்சணை, கறுப்புப் பசு அல்லது எருமை மற்றும் வஸ்திரம் ஆகியவற்றை, என்னை நினைத்து, ஒரு அந்தணனுக்கு தானம் செய்ய வேண்டும்!’’ என்றார் சனி பகவான். மேலும், ‘`சனிக்கிழமை அன்று இந்த ஸ்லோகத்தை பக்தியுடன் சொல்லி பூஜை செய்பவருக்கு எந்த இன்னலும் தர மாட்டேன். அதுமட்டுமின்றி கோசாரம், ஜன்ம லக்னம், தசைகள், புக்திகள் ஆகியவற்றில் வேறு ஒரு கிரகத்தால் ஏற்படும் பீடைகளில் இருந்தும் காப்பாற்றுவேன். அனைத்து உலக இன்னல்களையும் களைந்து இன்பமுறச் செய்வேன்!’’ என்றும் உறுதி அளித்தார் சனி பகவான். இந்த ஸ்லோகத்தைப்பாடி சனிபகவானின் இன்னருளைப் பெறுவோம்.

ஓம் நமசிவாய...
சனி பகவானே போற்றி போற்றி....

Comments

Popular posts from this blog

ஜோதிட உலகத்தில் இருக்கும் "வக்ர கிரகங்கள்" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்..?

  தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.. ★"வக்ர கிரகங்கள்" என்பது நமது ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 5,6,7,8 பாவங்களில் "செவ்வாய், சனி, குரு"இந்த கிரகங்கள் இருந்தால் வக்ரமாக கருதப்படுகிறது. ★சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் 40 டிகிரி இடைவெளி இருந்தால் சுக்கிரன் வக்கரமாகவும், ★சூரியனுக்கும் புதனுக்கும் இடையில் 17 டிகிரி இடைவெளி இருந்தால் புதன் வக்கிரமாகவும் கருதப்படுகிறது. ★வக்கிரமான கிரகங்கள் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயத்தில் நமக்கு விசித்திரமான, வித்தியாசமான, மாற்று சிந்தனை உடைய, நடைமுறைக்கு ஒத்துவராத, வழக்கத்திற்கு மாறான முறையில் நம் மனதில் தோற்றுவிக்கும் மற்றும் நம்மை வழி நடத்தும். ★உதாரணமாக 4ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் வீடு வண்டி, வாகனம், சொத்து, property போன்றவற்றில் நம்மை விசித்திரமாக,வித்தியாசமாக, மாற்று சிந்தனை உடையதாக நம்மை வழி நடத்தும். ★10ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் விசித்திரமான தொழில் வித்தியாசமான தொழில் மாற்று சிந்தனை உடைய தொழில், எல்லோரும் ஒரு மாதிரி தொழில் செய்தால் இவர் அதற்கு நேர்மாறாக ...

*பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!*

  *பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!* 1. தினப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். 2. கணப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் மங்களம் உண்டு. 3. மகேந்திரப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் விருத்தியாகும். 4. ஸ்த்ரீ தீர்க்கம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்க முடியும். சொத்துக்கள் முதலில் தங்கும். 5. யோனி கூடம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவியின் தாம்பத்தியம் ருசிக்கும். 6. ராசிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தி அடைந்து செழிக்கும். 7. ராசி அதிபதிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கரு சீக்கிரத்தில் உண்டாகும். 8. வசியப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பார்கள். 9. ரஜ்ஜுப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கடைசி வரை பெண் சுமங்கலியாக இருப்பாள். 10. வேதை பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் தம்பதிகளுக்கு பெரிய துக்கங்கள் வராமல் காக்கும்.
  *தினமும் வளரும் அதிசய நந்தி கோவில்.* பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக உள்ளது ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்திய நாட்டில் லட்சக்கணக்கில் கோவில்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான பல கோவில்கள் அதிசயத்தக்க சிறப்பம்சங்களும், வரலாறு பின்னனின் கொண்டதாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்த பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இருக்கும் நந்தி சிலையின் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தொல்பொருள் ஆய்வுத் துறையும்கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். ​கோவிலின் வரலாறு இந்த கோவில் வைணவ மரபுகளின்படி கட்டப்பட்டுள்ளது. இது 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்க வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிஹர் புக்க ராய் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் ஐதராபாத்தில் இருந்து 308 கி.மீ தொலைவிலும், விஜயவாடாவிலிருந்து 359 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பண்டைய கால பல்லவர்கள், சோழர்...