Skip to main content

*சனிப்பெயர்ச்சி* *மந்திரம்*

*சனிப்பெயர்ச்சி* *மந்திரம்*

 *ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரெளம் ஷக் சனைச்சராய நம;*

*நீதிதேவன் சனீஸ்வரரை வேண்டுங்கள்; ஏற்றம் தருவார்; மாற்றம் தருவார்*
சனி பகவானை வணங்கினால், சனி கிரகம் மட்டுமின்றி மற்ற கிரக தோஷங்களில் இருந்தும் விடுபடலாம். நமக்கு ஏற்படுகிற அனைத்து சங்கடங்களையும் கஷ்டங்களையும் இன்னல்களையும் போக்கி அருளுவார் சனீஸ்வரர்.
**சனியைப் போல் கொடுப்பாருமில்லை; சனியைப் போல் கெடுப்பாருமில்லை* என்பார்கள். அந்த அளவுக்கு சனி பகவான் நல்லவைகளும் செய்யக்கூடியவர். துன்பங்களையும் கொடுக்கக் கூடியவர் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
நவக்கிரகங்களில் மிக மிக வலிமையான கிரகம் என்று போற்றப்படக் கூடியவர் சனி பகவான். ராகு - கேது பெயர்ச்சி வரும். அதற்குக் கூட அவ்வளவாக கலங்கித் தவிக்கமாட்டோம். குருப் பெயர்ச்சி வரும். அதற்கும் பதறித் துடிக்க மாட்டோம். ஆனால், சனிப்பெயர்ச்சி வந்துவிட்டாலே, சனீஸ்வரர் நமக்கு என்ன செய்யப் போகிறார், நல்லது நடக்குமா, தடைகள் அனைத்தும் அகலுமா, இதுவரை இருந்து கஷ்டங்களும் நஷ்டங்களும் விலகிவிடுமா என்றெல்லாம் நெஞ்சில் கைவைத்து கண் மூடி வேண்டிக்கொள்வோம்
சனீஸ்வரர் என்பவர், நீதிபதியைப் போலானவர். தராசு முனை போல் தீர்ப்பு சொல்லக்கூடியவர். தீர்ப்பை சொல்வது மட்டுமின்றி, அதற்கான தண்டனைகளையும் சரியாக வழங்கக் கூடியவர். அதனால்தான் அந்தத் தண்டனையைக் கண்டு அஞ்சுகிறோம்
அதேசமயம், சனி கிரக தோஷம் உள்ளவர்கள் சனி பகவானை உரிய முறையில் சனீஸ்வரரை தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொண்டால், பிரார்த்தனை செய்து வந்தால், சனி பகவானின் அருளைப் பெறலாம். கிரக தோஷ பாதிப்பில் இருந்து காத்தருள்வார்.
*சனீஸ்வரருக்கு, திருநள்ளாறு திருத்தலம் உள்ளது. திருவாரூர் அருகே திருக்கொள்ளிக்காடு எனும் தலத்தில் பொங்கு சனீஸ்வரராக எழுந்தருளியுள்ளார். இந்தத் தலங்களுக்குச் சென்று தரிசிப்பது விசேஷம். அதேபோல், தேனி மாவட்டத்தில் குச்சனூர் சனீஸ்வரரை தரிசிப்பதும் மிகுந்த பலன்களைத் தரும்*.
*மேலும் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று, நவக்கிரகத்தை வலம் வந்து வேண்டிக்கொள்வதும் தினமும் காகத்துக்கு சாதம் வைப்பதும் எள் கலந்த சாதம் வைப்பதும் பாவங்களை நீக்கி புண்ணியங்களைக் கொடுக்கவல்லது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.*
*சனி கிரக பாதிப்பு இல்லாதவர்களும் கூட*
*ஸ்ரீ சிவபெருமான் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்..!*

Comments

Popular posts from this blog

ஜோதிட உலகத்தில் இருக்கும் "வக்ர கிரகங்கள்" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்..?

  தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.. ★"வக்ர கிரகங்கள்" என்பது நமது ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 5,6,7,8 பாவங்களில் "செவ்வாய், சனி, குரு"இந்த கிரகங்கள் இருந்தால் வக்ரமாக கருதப்படுகிறது. ★சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் 40 டிகிரி இடைவெளி இருந்தால் சுக்கிரன் வக்கரமாகவும், ★சூரியனுக்கும் புதனுக்கும் இடையில் 17 டிகிரி இடைவெளி இருந்தால் புதன் வக்கிரமாகவும் கருதப்படுகிறது. ★வக்கிரமான கிரகங்கள் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயத்தில் நமக்கு விசித்திரமான, வித்தியாசமான, மாற்று சிந்தனை உடைய, நடைமுறைக்கு ஒத்துவராத, வழக்கத்திற்கு மாறான முறையில் நம் மனதில் தோற்றுவிக்கும் மற்றும் நம்மை வழி நடத்தும். ★உதாரணமாக 4ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் வீடு வண்டி, வாகனம், சொத்து, property போன்றவற்றில் நம்மை விசித்திரமாக,வித்தியாசமாக, மாற்று சிந்தனை உடையதாக நம்மை வழி நடத்தும். ★10ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் விசித்திரமான தொழில் வித்தியாசமான தொழில் மாற்று சிந்தனை உடைய தொழில், எல்லோரும் ஒரு மாதிரி தொழில் செய்தால் இவர் அதற்கு நேர்மாறாக ...

*பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!*

  *பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!* 1. தினப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். 2. கணப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் மங்களம் உண்டு. 3. மகேந்திரப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் விருத்தியாகும். 4. ஸ்த்ரீ தீர்க்கம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்க முடியும். சொத்துக்கள் முதலில் தங்கும். 5. யோனி கூடம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவியின் தாம்பத்தியம் ருசிக்கும். 6. ராசிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தி அடைந்து செழிக்கும். 7. ராசி அதிபதிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கரு சீக்கிரத்தில் உண்டாகும். 8. வசியப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பார்கள். 9. ரஜ்ஜுப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கடைசி வரை பெண் சுமங்கலியாக இருப்பாள். 10. வேதை பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் தம்பதிகளுக்கு பெரிய துக்கங்கள் வராமல் காக்கும்.
  *தினமும் வளரும் அதிசய நந்தி கோவில்.* பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக உள்ளது ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்திய நாட்டில் லட்சக்கணக்கில் கோவில்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான பல கோவில்கள் அதிசயத்தக்க சிறப்பம்சங்களும், வரலாறு பின்னனின் கொண்டதாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்த பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இருக்கும் நந்தி சிலையின் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தொல்பொருள் ஆய்வுத் துறையும்கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். ​கோவிலின் வரலாறு இந்த கோவில் வைணவ மரபுகளின்படி கட்டப்பட்டுள்ளது. இது 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்க வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிஹர் புக்க ராய் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் ஐதராபாத்தில் இருந்து 308 கி.மீ தொலைவிலும், விஜயவாடாவிலிருந்து 359 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பண்டைய கால பல்லவர்கள், சோழர்...