Skip to main content

கஷ்டங்கள் தீர 12 ராசிக்குமான இரண்டே வெற்றிலையை வைத்து செய்யக்கூடிய ரகசிய வழிகள்..

 

🔯கஷ்டங்கள் தீர 12 ராசிக்குமான இரண்டே வெற்றிலையை வைத்து செய்யக்கூடிய ரகசிய வழிகள்.*
*🔯வெற்றிலைக்கு ஆன்மீக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் எண்ணற்ற பயன்கள் இருக்கிறது.*
இதில் அடங்கி இருக்கும் கார்ப்புத்தன்மை எத்தகைய சளி, இருமலையும் போக்க வல்லது. வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு வெற்றிலைச் சாற்றை ஒரு அவுன்ஸ் வீதம் கொடுத்து வந்தால் சளித் தொல்லையே இருக்காது.
இரண்டு வெற்றிலையை வதக்கி சாறெடுத்து இறுதுளி மூக்கில் விட்டால் தலையில் கோர்த்து இருக்கும் நீர் முழுவதும் நீங்கி தலைபாரம் நிமிடத்தில் ஓடி போய்விடும்.
ஊற வைத்த சிவப்பரிசியுடன் இரு வெற்றிலையை சேர்த்து சாப்பிட்டால் மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் உண்டாகும்.
வெற்றிலையில் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
*🔯அனைத்து சுபகாரியங்களிலும் முக்கிய பங்கு வகிக்கும் வெற்றிலையை எந்த ராசிக்காரர்கள் என்ன செய்தால் கஷ்டங்கள் தீரும் என்று இப்பதிவில் காணலாம்.*
*🔯மேஷம்*
மேஷ ராசிக்காரர்கள் முருக பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அன்று பூஜையில் இரண்டு வெற்றிலை வைத்து அதன் மீது மாம்பழம் வைத்து வழிபட வேண்டும். பூஜை முடிந்து வெற்றிலையை மருத்துவ ரீதியாக பயன்படுத்தி கொள்ளலாம். மாம்பழத்தை சாப்பிட்டு விட வேண்டும். இவ்வாறு செய்தால் கஷ்டங்கள் உங்களை நெருங்காது. கவலைகள் பறந்தோடும்.
*🔯ரிஷபம்*
ரிஷப ராசிக்காரர்கள் ராகு பகவானுக்கு செவ்வாய்க்கிழமை அன்று கோவிலுக்கு சென்று இரண்டு வெற்றிலையுடன் 9 மிளகு வைத்து வழிபாடு செய்து வர வேண்டும். வீட்டிற்கு வந்ததும் அதனை உட்கொள்வதன் மூலம் உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் விலகும். கடன் தொல்லை நீங்கும்.
*🔯மிதுனம்*
மிதுன ராசிக்காரர்கள் புதன் கிழமை அன்று உங்களது குலதெய்வத்திற்கு இரண்டு வெற்றிலையுடன் இரண்டு வாழைப்பழம் வைத்து வழிபாடு செய்து அதனை உட்கொண்டால் கஷ்டங்கள் தீரும். குலதெய்வ அருள் கிட்டும். சங்கடங்கள் பறந்தோடும். நிம்மதி கிடைக்கும்.
*🔯கடகம்*
கடக ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை அன்று காளி கோவில் சென்று இரண்டு வெற்றிலையுடன் மாதுளம்பழம் வைத்து வழிபட்டு வீட்டிற்கு வந்து அதனை உட்கொண்டால் கஷ்டங்கள் நீங்கி நலம் கிட்டும். மனத்தெளிவு உண்டாவதை நீங்களே உணர்வீர்கள்.
*🔯சிம்மம்*
சிம்ம ராசிக்காரர்கள் வியாழன் அன்று உங்களது இஷ்ட தெய்வத்தை பூஜைக்கு தயார் செய்து அவர் முன் இரண்டு வெற்றிலையுடன் வாழைப்பழம் வைத்து பூஜை செய்து அதனை உட்கொண்டால் தீராத துன்பங்கள் தீரும். குழம்பிய குட்டை போன்று இருந்த உங்களது மனம் தெளிவடையும்.
*🔯கன்னி*
கன்னி ராசிக்காரர்கள் வியாழன் அன்று உங்களது இஷ்ட தெய்வத்தை பூஜை செய்து இரண்டு வெற்றிலையுடன் 27 மிளகு வைத்து உட்கொண்டால் கஷ்டங்கள் நீங்கும். குடும்பத்தில் அமைதி பிறக்கும்.
*🔯துலாம்*
துலாம் ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை அன்று குலதெய்வத்தை பூஜித்து இரண்டு வெற்றிலையுடன் கிராம்பு வைத்து வழிபாடு செய்து பின்னர் அதனை உட்கொண்டால் பிரச்சனைகள் நீங்கி இல்லம் அமைதி அடையும்.
*🔯விருச்சிகம்*
விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை அன்று அம்பிகையை துதித்து இரண்டு வெற்றிலையுடன் பேரீச்சம் பழம் வைத்து வழிபட்டு உட்கொண்டால் துன்பங்கள் அனைத்தும் நீங்கும். வாழ்க்கையை வெறுத்தவர் கூட நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.
*🔯தனுசு*
தனுசு ராசிக்காரர்கள் வியாழன் கிழமை அன்று முருகனுக்கு இரண்டு வெற்றிலையுடன் சிறிது கற்கண்டு வைத்து வழிபட்டு அதனை உட்கொண்டால் கஷ்டங்கள் நீங்கும். நிம்மதி கிடைக்கும்.
*🔯மகரம்*
மகர ராசிக்காரர்கள் சனிக்கிழமை அன்று காளி கோவில் சென்று இரண்டு வெற்றிலையுடன் அச்சுவெல்லம் சேர்த்து வழிபாடு செய்து பின்னர் வீட்டிற்கு வந்து அதனை உட்கொண்டால் துன்பங்கள் நீங்கும்.
*🔯கும்பம்*
கும்ப ராசிக்காரர்கள் சனிக்கிழமை அன்று காளி கோவில் சென்று இரண்டு வெற்றிலையுடன் நெய் சிறிது சேர்த்து வழிபாடு செய்து பின்னர் வீட்டிற்கு வந்து அதனை உட்கொண்டால் கஷ்டங்கள் நீங்கும். மனதில் உள்ள பாரங்கள் இறங்குவதை உணர்வீர்கள்.
*🔯மீனம்*
மீன ராசிக்காரர்கள் ஞாயிரு அன்று இஷ்ட தெய்வத்தை பூஜைக்கு தயார் செய்து அவர் முன் இரண்டு வெற்றிலையுடன் சர்க்கரை சிறிது வைத்து பூஜை முடிந்ததும் அதனை உட்கொள்வதால் சகல பிணிகளும் தீரும். நிம்மதி கிடைக்கும். 🙏🙏

Comments

Popular posts from this blog

ஜோதிட உலகத்தில் இருக்கும் "வக்ர கிரகங்கள்" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்..?

  தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.. ★"வக்ர கிரகங்கள்" என்பது நமது ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 5,6,7,8 பாவங்களில் "செவ்வாய், சனி, குரு"இந்த கிரகங்கள் இருந்தால் வக்ரமாக கருதப்படுகிறது. ★சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் 40 டிகிரி இடைவெளி இருந்தால் சுக்கிரன் வக்கரமாகவும், ★சூரியனுக்கும் புதனுக்கும் இடையில் 17 டிகிரி இடைவெளி இருந்தால் புதன் வக்கிரமாகவும் கருதப்படுகிறது. ★வக்கிரமான கிரகங்கள் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயத்தில் நமக்கு விசித்திரமான, வித்தியாசமான, மாற்று சிந்தனை உடைய, நடைமுறைக்கு ஒத்துவராத, வழக்கத்திற்கு மாறான முறையில் நம் மனதில் தோற்றுவிக்கும் மற்றும் நம்மை வழி நடத்தும். ★உதாரணமாக 4ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் வீடு வண்டி, வாகனம், சொத்து, property போன்றவற்றில் நம்மை விசித்திரமாக,வித்தியாசமாக, மாற்று சிந்தனை உடையதாக நம்மை வழி நடத்தும். ★10ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் விசித்திரமான தொழில் வித்தியாசமான தொழில் மாற்று சிந்தனை உடைய தொழில், எல்லோரும் ஒரு மாதிரி தொழில் செய்தால் இவர் அதற்கு நேர்மாறாக ...

*பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!*

  *பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!* 1. தினப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். 2. கணப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் மங்களம் உண்டு. 3. மகேந்திரப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் விருத்தியாகும். 4. ஸ்த்ரீ தீர்க்கம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்க முடியும். சொத்துக்கள் முதலில் தங்கும். 5. யோனி கூடம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவியின் தாம்பத்தியம் ருசிக்கும். 6. ராசிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தி அடைந்து செழிக்கும். 7. ராசி அதிபதிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கரு சீக்கிரத்தில் உண்டாகும். 8. வசியப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பார்கள். 9. ரஜ்ஜுப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கடைசி வரை பெண் சுமங்கலியாக இருப்பாள். 10. வேதை பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் தம்பதிகளுக்கு பெரிய துக்கங்கள் வராமல் காக்கும்.
  *தினமும் வளரும் அதிசய நந்தி கோவில்.* பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக உள்ளது ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்திய நாட்டில் லட்சக்கணக்கில் கோவில்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான பல கோவில்கள் அதிசயத்தக்க சிறப்பம்சங்களும், வரலாறு பின்னனின் கொண்டதாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்த பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இருக்கும் நந்தி சிலையின் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தொல்பொருள் ஆய்வுத் துறையும்கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். ​கோவிலின் வரலாறு இந்த கோவில் வைணவ மரபுகளின்படி கட்டப்பட்டுள்ளது. இது 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்க வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிஹர் புக்க ராய் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் ஐதராபாத்தில் இருந்து 308 கி.மீ தொலைவிலும், விஜயவாடாவிலிருந்து 359 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பண்டைய கால பல்லவர்கள், சோழர்...