Skip to main content


 

கோயிலின் பழமையும் சிறப்பும் விளங்கும். இந்த யந்திரத்தின் அருகே நவக்கிரக மேடை அமைத்துள்ளனனர். இதிலிருக்கும் சனிபகவான் தனக்கு அதிபதியான விநாயகரை பார்த்திருப்பது தனி சிறப்பு.
11 சுயம்பு மூர்த்திகள் :
மூலஸ்தானத்தில் உள்ள 11 விநாயகருக்கும் தனித்தனியே பெயர் உள்ளது.
பால விநாயகர்,
நடன விநாயகர்,
ஓம்கார விநாயகர்,
கற்பக விநாயகர்,
சிந்தாமணி விநாயகர்,
செல்வ விநாயகர்,
மயூர விநாயகர்,
மூசிக விநாயகர்,
வல்லப விநாயகர்,
சித்திபுத்தி விநாயகர்,
பஞ்சமுக விநாயகர்.
இதில் பால விநாயகர் எப்போதும் நீரில் மூழ்கியபடி காட்சி தருகிறார். ஆறாவதாக வீற்றிருக்கும் செல்வ விநாயகருக்கு தான் திருமுழுக்காட்டும், ஆராதனையும் நடைபெறுகிறது.
தலச் சிறப்பு :
பதினாறு வகை செல்வங்களில் மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான 11 செல்வங்களை அள்ளித்தரும் வள்ளலாக 11 விநாயகர்கள் உள்ளனர். “விநாயக சபை‘ என்று இந்த அமைப்புக்கு பெயரிட்டுள்ளனர்.
யானை வாகனம் :
பொதுவாக விநாயகரின் எதிரே மூஷிகம் வாகனம் இருப்பதே இயல்பு. ஆனால், செல்வவிநாயகருக்கு எதிரில் யானை வாகனம் நிறுவப்பட்டுள்ளது. காலப்போக்கில் ஒவ்வொரு விநாயகருக்கும் மூஷிகம் வாகனங்களை நிறுவினர்கள். பதினொரு விநாயகர், யானை மற்றும் மூஷிகம் வாகனங்கள், கொடிமரம் ஆகியவற்றை சேர்த்து பார்க்கும் போது, “ஓம்‘ என்னும் பிரணவ மந்திரத்தின் அமைப்பில் தெரியும். தேவர்கள், முனிவர்கள் தினமும் இங்கு வழிபாடு செய்வதாகக் கூறப்படுகிறது. அதற்கு வசதியாக கருவறைக்கு மேற்கூரை கிடையாது. கோயில் கொடிமரம் மற்ற கோயில்களைப் போல் வெளியே இல்லாமல், கருவறையிலேயே அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு.
இங்கு அனைத்துமே சுயம்பு என்பதால் ஒவ்வொரு விநாயகரையும் அந்தந்த பெயரில் சுதையில் வடித்துக் கோயில் சுற்று சுவரில் வைத்துள்ளார்கள். விநாயகரின் பின்புறம் மீனாட்சி சுந்தரேசுவரரும், அன்னை காமாட்சியும் உள்ளனர்.
இங்கு இரண்டு தெட்சிணாமூர்த்திகள் உண்டு. அதில் ஒருவர் விநாயகரைப் போலவே சுயம்பு மூர்த்தி. தல விருட்சமாக இருக்கும் வன்னிமரம் மிகவும் சக்தி வாய்ந்தது. கோயில் உருவான காலத்திலிருந்தே இருக்கும் இந்த மரம் மிகப்பெரிதாக வளர்ந்துள்ளது. விநாயகர் கோயிலில் வன்னிமரம் இருப்பது மிகவும் அரிது. வன்னிமரத்தின் அதிபதி சனீசுவரன். எனவே சனி தோழம் உள்ளவர்கள் இந்த பழமையான மரத்தை வழிபாடு செய்து பலனடைகிறார்கள். இதற்கு தனியாக விஜயதசமி நாளில் சிறப்பு பூஜையும் உண்டு.
திருவிழா :
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி 10 நாள் திருவிழா, ஆடி கடைசி வெள்ளி லட்ச தீபம், புரட்டாசியில் பவித்ர உற்சவம். மாதாந்திர சங்கடகர சதுர்த்தி. வாராந்திர வெள்ளிக்கிழமைகளில் விசேட பூசை நடத்தப்படுகிறது.
கோரிக்கைகள் :
திருமண தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாதவர்கள் சங்கடகர சதுர்த்தி நாளில் விரதமிருந்து தீபம் ஏற்றி விநாயகரை வழிபாடு செய்தபின், ஆதிசங்கரர் இயந்திரம் அமைத்துள்ள இடத்திலுள்ள நவக்கிரகத்தை வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பாலவிநாயகருக்கு பால் முழுக்காட்டு செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன் :
விநாயகருக்கு திருமுழுக்காட்டு செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
ஓம் ஸ்ரீ செல்வ கணபதையே நமோ நமஹா 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏
நல்ல பயனுள்ள தகவல்களை அனைவருக்கும் பகிர்வோமே 🙏🙏🙏

Comments

Popular posts from this blog

ஜோதிட உலகத்தில் இருக்கும் "வக்ர கிரகங்கள்" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்..?

  தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.. ★"வக்ர கிரகங்கள்" என்பது நமது ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 5,6,7,8 பாவங்களில் "செவ்வாய், சனி, குரு"இந்த கிரகங்கள் இருந்தால் வக்ரமாக கருதப்படுகிறது. ★சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் 40 டிகிரி இடைவெளி இருந்தால் சுக்கிரன் வக்கரமாகவும், ★சூரியனுக்கும் புதனுக்கும் இடையில் 17 டிகிரி இடைவெளி இருந்தால் புதன் வக்கிரமாகவும் கருதப்படுகிறது. ★வக்கிரமான கிரகங்கள் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயத்தில் நமக்கு விசித்திரமான, வித்தியாசமான, மாற்று சிந்தனை உடைய, நடைமுறைக்கு ஒத்துவராத, வழக்கத்திற்கு மாறான முறையில் நம் மனதில் தோற்றுவிக்கும் மற்றும் நம்மை வழி நடத்தும். ★உதாரணமாக 4ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் வீடு வண்டி, வாகனம், சொத்து, property போன்றவற்றில் நம்மை விசித்திரமாக,வித்தியாசமாக, மாற்று சிந்தனை உடையதாக நம்மை வழி நடத்தும். ★10ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் விசித்திரமான தொழில் வித்தியாசமான தொழில் மாற்று சிந்தனை உடைய தொழில், எல்லோரும் ஒரு மாதிரி தொழில் செய்தால் இவர் அதற்கு நேர்மாறாக ...

*பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!*

  *பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!* 1. தினப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். 2. கணப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் மங்களம் உண்டு. 3. மகேந்திரப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் விருத்தியாகும். 4. ஸ்த்ரீ தீர்க்கம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்க முடியும். சொத்துக்கள் முதலில் தங்கும். 5. யோனி கூடம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவியின் தாம்பத்தியம் ருசிக்கும். 6. ராசிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தி அடைந்து செழிக்கும். 7. ராசி அதிபதிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கரு சீக்கிரத்தில் உண்டாகும். 8. வசியப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பார்கள். 9. ரஜ்ஜுப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கடைசி வரை பெண் சுமங்கலியாக இருப்பாள். 10. வேதை பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் தம்பதிகளுக்கு பெரிய துக்கங்கள் வராமல் காக்கும்.
  *தினமும் வளரும் அதிசய நந்தி கோவில்.* பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக உள்ளது ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்திய நாட்டில் லட்சக்கணக்கில் கோவில்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான பல கோவில்கள் அதிசயத்தக்க சிறப்பம்சங்களும், வரலாறு பின்னனின் கொண்டதாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்த பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இருக்கும் நந்தி சிலையின் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தொல்பொருள் ஆய்வுத் துறையும்கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். ​கோவிலின் வரலாறு இந்த கோவில் வைணவ மரபுகளின்படி கட்டப்பட்டுள்ளது. இது 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்க வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிஹர் புக்க ராய் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் ஐதராபாத்தில் இருந்து 308 கி.மீ தொலைவிலும், விஜயவாடாவிலிருந்து 359 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பண்டைய கால பல்லவர்கள், சோழர்...