Skip to main content


🙏 40. " எல்லாமானவரே1 உமக்கு முன்புறத்திலும், பின் புறத்திலும் நமஸ்காரம். எல்லா பக்கங்களிலும் உமக்கு நமஸ்காரம். அளவற்ற வல்லமையையும், எண்ணற்ற பராக்கிரமத்தையும் உடைய நீர், அனைத்திலும் நன்கு வியாபித்திருக்கிறீர்; ஆதலால் நீரே யாவுமாக இருக்கிறீர்". 🙏
விளக்கம்: எங்குத் திரும்பிப் பார்த்தாலும் எல்லாம் இறைவனுடைய வடிவம். ஆகையால் நாலா பக்கங்களிலும் பகவானை வணங்குவதே பொருத்தமானதாகும். பகவான் அளவற்ற வல்லமையை உடையவர். தனது எல்லையற்ற வல்லமையை எண்ணற்ற விதங்களில் அவர் செயல்படுத்துகிறார். இந்தப் பிரபஞ்ச நடைமுறையே அதற்குச் சான்று. எனவே அவர் அளவற்ற பராக்கிரமத்தை. உடையவர்! எனப்படுகிறார்.
பகவான் என்று கூறினால், இந்தப் பிரபஞ்சத்திலுள்ள உயிரினங்கள் அனைத்துமே அவரிடத்தே அடங்கப்பெற்றுள்ளன. அவரைப் போற்றினால் எல்லாமும் போற்றப்படுகின்றன; எல்லாவற்றையும் போற்றினால் அதில் பகவானும் போற்றப்படுகிறார்! என்றாகிறது.
🙏, 41.+42. " உமது இப்பெருமையை அறியாது, கவனமின்றி அன்பால் தோழன் எனக் கருதி, " ஏ கிருஷ்ணா!,
ஏ யாதவா! , ஏ கூட்டாளி! என்று பணிவின்றி எது சொல்லப்பட்டதோ, அச்சுதா! விளையாடிய பொழுதும், படுத்திருந்தபொழுதும், அமர்ந்திருந்தபொழுதும், உணவருந்துகையிலும், தனித்தோ, பிறர் பார்வையிலோ இருந்தபொழுதும், ஏளனமாக எங்ஙனம் அவமதிக்கப்பட்டீரோ, அதையெல்லாம், அளப்பரியோய்! மன்னித்தருள்க".🙏
விளக்கம்: மிக *முக்கியமான சுலோகம் இது. இதுவரைக் கிருஷ்ணரைத் தனது தாய்மாமனின் மகனாகவும், தனது சமவயதுள்ள உற்ற தோழனாகவுமே அர்ஜுனன் இதுவரைக் கண்டு வந்திருக்கிறான். தனது ஆருயிர் தோழன், மைத்துனன் என்றெல்லாம் விளையாட்டுத்தனமாகவும், கேலிப் பேச்சுப் பேசியும் நடந்துக்கொண்டதை எல்லாம் இப்பொழுது நினைத்து நடுங்குகிறான் விஜயன்.
பகவானைப் பற்றிய மெய்யறிவு வந்ததும், அர்ஜுனனின் மனநிலையே அடியோடு மாறிவிடுகிறது. சர்வ வல்லமையுடைய பரம்பொருளான ஶ்ரீகிருஷ்ணரை இதுவரை விளையாட்டுத் தோழனாக மட்டுமே பாவித்து, நடந்துக் கொண்டோமே! என்று வருந்தி மன்னிப்புக் கேட்கிறான் பார்த்தன்.
கிருஷ்ண பகவானாகத் தோன்றிய தோற்றம் ஒன்று மட்டுமல்ல; இவ்வுலகிலுள்ள தோற்றங்கள் யாவும் ஈசுவரனுடையவைகளே. அவைகளைப் பாராட்டுமளவு நமக்கு நல்லறிவு வருகிறது. நம் அறிவு தெளிந்தது என்றாலும், வணக்கத்தோடு கூடிய நெருக்கத்தை இறைவனிடமும், இறைவனது படைப்புகளிடமும் வைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்! இதுவே தெளிவுபட்ட மனமாற்றமாகிறது. 🙏

 

Comments

Popular posts from this blog

ஜோதிட உலகத்தில் இருக்கும் "வக்ர கிரகங்கள்" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்..?

  தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.. ★"வக்ர கிரகங்கள்" என்பது நமது ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 5,6,7,8 பாவங்களில் "செவ்வாய், சனி, குரு"இந்த கிரகங்கள் இருந்தால் வக்ரமாக கருதப்படுகிறது. ★சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் 40 டிகிரி இடைவெளி இருந்தால் சுக்கிரன் வக்கரமாகவும், ★சூரியனுக்கும் புதனுக்கும் இடையில் 17 டிகிரி இடைவெளி இருந்தால் புதன் வக்கிரமாகவும் கருதப்படுகிறது. ★வக்கிரமான கிரகங்கள் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயத்தில் நமக்கு விசித்திரமான, வித்தியாசமான, மாற்று சிந்தனை உடைய, நடைமுறைக்கு ஒத்துவராத, வழக்கத்திற்கு மாறான முறையில் நம் மனதில் தோற்றுவிக்கும் மற்றும் நம்மை வழி நடத்தும். ★உதாரணமாக 4ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் வீடு வண்டி, வாகனம், சொத்து, property போன்றவற்றில் நம்மை விசித்திரமாக,வித்தியாசமாக, மாற்று சிந்தனை உடையதாக நம்மை வழி நடத்தும். ★10ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் விசித்திரமான தொழில் வித்தியாசமான தொழில் மாற்று சிந்தனை உடைய தொழில், எல்லோரும் ஒரு மாதிரி தொழில் செய்தால் இவர் அதற்கு நேர்மாறாக ...

*பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!*

  *பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!* 1. தினப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். 2. கணப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் மங்களம் உண்டு. 3. மகேந்திரப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் விருத்தியாகும். 4. ஸ்த்ரீ தீர்க்கம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்க முடியும். சொத்துக்கள் முதலில் தங்கும். 5. யோனி கூடம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவியின் தாம்பத்தியம் ருசிக்கும். 6. ராசிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தி அடைந்து செழிக்கும். 7. ராசி அதிபதிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கரு சீக்கிரத்தில் உண்டாகும். 8. வசியப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பார்கள். 9. ரஜ்ஜுப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கடைசி வரை பெண் சுமங்கலியாக இருப்பாள். 10. வேதை பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் தம்பதிகளுக்கு பெரிய துக்கங்கள் வராமல் காக்கும்.
  *தினமும் வளரும் அதிசய நந்தி கோவில்.* பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக உள்ளது ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்திய நாட்டில் லட்சக்கணக்கில் கோவில்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான பல கோவில்கள் அதிசயத்தக்க சிறப்பம்சங்களும், வரலாறு பின்னனின் கொண்டதாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்த பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இருக்கும் நந்தி சிலையின் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தொல்பொருள் ஆய்வுத் துறையும்கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். ​கோவிலின் வரலாறு இந்த கோவில் வைணவ மரபுகளின்படி கட்டப்பட்டுள்ளது. இது 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்க வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிஹர் புக்க ராய் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் ஐதராபாத்தில் இருந்து 308 கி.மீ தொலைவிலும், விஜயவாடாவிலிருந்து 359 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பண்டைய கால பல்லவர்கள், சோழர்...