Skip to main content

நீங்கள் விரும்பிய படி நவகிரகங்கள் பற்றிய ஒரு சிறு தகவல்.....

 


ஜோதிடத்தின் அடிப்படையாக நவகிரகங்கள் பார்க்கப்படுகின்றன. நவகிரகங்கள் எந்தெந்த ராசிகளுக்கு அதிபதியாக செயல்படுகின்றன. ஒவ்வொரு கிரகங்களுக்கான ராசி, நிறம், தானியம், பூ, நவரத்தினம், வாகனம், ஸ்தலம், நவகிரகங்களுக்குரிய மனைவிகள் யார் என்பதைப் பார்ப்போம்.
​சூரியன்
ராசி : சிம்மம்
நிறம் : இளஞ்சிவப்பு (ஆரஞ்சு)
தானியம் : கோதுமை
பூ : செந்தாமரை மலர்
நவரத்தினம் : மாணிக்கம்
வாகனம் : ஏழு குதிரைகள் பூட்டிய தேர்
ஸ்தலம் : சிவசூரியநாராயண கோவில், கும்பகோணம்
நன்மை : ஆரோக்கியத்தை வலுப்படுத்துவார்.
சூரியனின் மனைவிகள் : சரண்யா மற்றும் சாயா
​சந்திரன்
ராசி : கடகம்
நிறம் : வெண்மை
தானியம் : பச்சரிசி
பூ : வெள்ளை அல்லிப் பூ
நவரத்தினம் : முத்து
வாகனம் : வெள்ளைக் குதிரை
ஸ்தலம் : திங்களூர் கைலாசநாதர் கோயில், தஞ்சாவூர்
நன்மை : கீர்த்தி
சந்திரனின் மனைவிகள் : 27 நட்சத்திரங்கள்
​செவ்வாய்
ராசி : மேஷம், விருச்சிகம்
நிறம் : சிவப்பு
தானியம் : துவரை
பூ : செவ்வரளி
நவரத்தினம் : பவளம்
வாகனம் : ஆட்டுக் கிடா
ஸ்தலம் : வைத்தீஸ்வரன் கோயில்
நன்மை : செல்வம், வீரம்
செவ்வாயின் மனைவி : சக்தி தேவி
​புதன்
ராசி : மிதுன ராசி, கன்னி ராசி
நிறம் : வெளிர் பச்சை
தானியம் : பச்சைப் பயறு
பூ : வெண்காந்தள் மலர்
நவரத்தினம் : மரகதம்
வாகனம் : குதிரை
ஸ்தலம் : திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில்
நன்மை : அறிவு
புதனின் மனைவி : இலா
​குரு பகவான்
ராசி : தனுசு, மீனம்
நிறம் : மஞ்சள்
தானியம் : கடலை
பூ : வெண் முல்லை
நவரத்தினம் : புஷ்பராகம்
வாகனம் : மீனம்
ஸ்தலம் : திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில்,
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திருவாரூர்
நன்மை : நன்மதிப்பு
குருவின் மனைவி : தாரா
​சுக்கிரன்
ராசி : ரிஷபம், துலாம்
நிறம் : வெண்மை
தானியம் : மொச்சை
பூ : வெண் தாமரை
நவரத்தினம் : வைரம்
வாகனம் : முதலை
ஸ்தலம் : கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில், கும்பகோணம்
நன்மை : அழகு, குடும்ப இன்பம்
சுக்கிரனின் மனைவி : சுகிர்தி மற்றும் உர்ஜஸ்வதி
சுக்கிரன் நன்மை தரும் இடங்கள் மற்றும் பலன்கள்!
​சனி
ராசி : மகரம், கும்பம்
நிறம் : கருமை
தானியம் : எள்
பூ : கருங்குவளை
நவரத்தினம் : நீலமணி
வாகனம் : காகம்
ஸ்தலம் : திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில், காரைக்கால்
நன்மை : சந்தோஷம்
சனியின் மனைவி : நீலாவதி
​ராகு
ராசி : எந்த ராசிக்கும் அதிபதி இல்லை
நிறம் : கருமை
தானியம் : உளுந்து
பூ : மந்தாரை
நவரத்தினம் : கோமேதகம்
வாகனம் : நீலச் சிம்மம்
ஸ்தலம் : திருநாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி கோவில்
நன்மை : எதிரிகளால் ஏற்படும் பயத்தை போக்குதல்
ராகுவின் மனைவி : சிம்ஹி
​கேது
ராசி : எந்த ராசிக்கும் அதிபதி இல்லை
நிறம் : செம்மை
தானியம் : கொள்ளு
பூ : செவ்வல்லி
நவரத்தினம் : வைடூரியம்
வாகனம் : கழுகு
ஸ்தலம் : நாகநாதசாமி கோயில், கீழப் பெரும்பள்ளம்
நன்மை : குல விருத்தி
கேதுவின் மனைவி : சித்திரலேகா

Comments

Popular posts from this blog

ஜோதிட உலகத்தில் இருக்கும் "வக்ர கிரகங்கள்" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்..?

  தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.. ★"வக்ர கிரகங்கள்" என்பது நமது ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 5,6,7,8 பாவங்களில் "செவ்வாய், சனி, குரு"இந்த கிரகங்கள் இருந்தால் வக்ரமாக கருதப்படுகிறது. ★சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் 40 டிகிரி இடைவெளி இருந்தால் சுக்கிரன் வக்கரமாகவும், ★சூரியனுக்கும் புதனுக்கும் இடையில் 17 டிகிரி இடைவெளி இருந்தால் புதன் வக்கிரமாகவும் கருதப்படுகிறது. ★வக்கிரமான கிரகங்கள் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயத்தில் நமக்கு விசித்திரமான, வித்தியாசமான, மாற்று சிந்தனை உடைய, நடைமுறைக்கு ஒத்துவராத, வழக்கத்திற்கு மாறான முறையில் நம் மனதில் தோற்றுவிக்கும் மற்றும் நம்மை வழி நடத்தும். ★உதாரணமாக 4ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் வீடு வண்டி, வாகனம், சொத்து, property போன்றவற்றில் நம்மை விசித்திரமாக,வித்தியாசமாக, மாற்று சிந்தனை உடையதாக நம்மை வழி நடத்தும். ★10ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் விசித்திரமான தொழில் வித்தியாசமான தொழில் மாற்று சிந்தனை உடைய தொழில், எல்லோரும் ஒரு மாதிரி தொழில் செய்தால் இவர் அதற்கு நேர்மாறாக ...

*பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!*

  *பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!* 1. தினப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். 2. கணப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் மங்களம் உண்டு. 3. மகேந்திரப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் விருத்தியாகும். 4. ஸ்த்ரீ தீர்க்கம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்க முடியும். சொத்துக்கள் முதலில் தங்கும். 5. யோனி கூடம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவியின் தாம்பத்தியம் ருசிக்கும். 6. ராசிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தி அடைந்து செழிக்கும். 7. ராசி அதிபதிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கரு சீக்கிரத்தில் உண்டாகும். 8. வசியப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பார்கள். 9. ரஜ்ஜுப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கடைசி வரை பெண் சுமங்கலியாக இருப்பாள். 10. வேதை பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் தம்பதிகளுக்கு பெரிய துக்கங்கள் வராமல் காக்கும்.
  *தினமும் வளரும் அதிசய நந்தி கோவில்.* பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக உள்ளது ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்திய நாட்டில் லட்சக்கணக்கில் கோவில்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான பல கோவில்கள் அதிசயத்தக்க சிறப்பம்சங்களும், வரலாறு பின்னனின் கொண்டதாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்த பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இருக்கும் நந்தி சிலையின் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தொல்பொருள் ஆய்வுத் துறையும்கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். ​கோவிலின் வரலாறு இந்த கோவில் வைணவ மரபுகளின்படி கட்டப்பட்டுள்ளது. இது 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்க வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிஹர் புக்க ராய் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் ஐதராபாத்தில் இருந்து 308 கி.மீ தொலைவிலும், விஜயவாடாவிலிருந்து 359 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பண்டைய கால பல்லவர்கள், சோழர்...