Skip to main content

*ராஜா தசரத மஹா சக்ரவர்த்தி சனி பகவானைப் போற்றி இயற்றின ஸ்லோகம்:*


*ராஜா தசரத மஹா சக்ரவர்த்தி சனி பகவானைப் போற்றி இயற்றின ஸ்லோகம்:*
தசரதன் வாக்கு தேவதையாகிய சரஸ்வதி தேவியை தியானித்துப் பின் சனி பகவானைக் குறித்து ஸ்தோத்திரம் செய்யத் தொடங்கினான்..
செய்யுள்:
*நம: கிருஷ்ணாய நீலாய சிதிகண்ட நிபாய ச: |*
*நம: காலாக்னிரூனாய க்ருதாந்தாய ச வை நம |*
*நமோ நிமலாம்ஸ தேஹாய தீர்கச்மரு ஜடாய ச |*
*நமோ விசால நேத்ராய சுக்ஷ்கோதர பயாக்ருதே |*
*நம புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேத வை நம: |*
*நமோ தீர்க்க சுஷ்காய காலதம்ஷ்ட்ராயதே நமோஸ்துதே |*
*நமேஸ்த கோடாக்ஷாய துர்நிரீச்ரயாய வை நமோ நம: |*
*நமோ கோராய ரெளத்ராய பீஷ்ணாய கபாலிநே |*
*நமஸ்தே ஸர்வ பக்ஷாய வலீமுக நமோஸ்துதே |*
*சூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கரே பயதாயிநே |*
*அதோத்ருஷ்டே நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே |*
*நமோ மந்தகதே துப்யம் நிஸ்த்ரிம்ஷயாய நமோஸ்துதே |*
*தபஸா தகத் தேஹாய நித்யப் யோக ரதாய |*
*நமோ நித்யம் க்ஷதார்த்தாய அத்ருப்தாய ச வை நம |*
*ஞான சக்ஷுர் நமஸ்தேஸ்து கச்யபாத்மஜாய ஸுநவே |*
*துஷ்டோ ததாஸி வை ராஜ்யம் த்ருஷ்டோ ஹரஸு தத்க்ஷணாத்...*
*தேவ அஸூர மனுஷ்யாஸ ஸித்த வித்யார்த்த ரோரகா |*
*த்வாயவ லோஹிதா ஸர்வே தைன்யமாஸு வ்ரஜந்திதே |*
இந்த ஸ்தோத்திரன் விளக்கம் :
கரியவனே, நீல நிறம் படைத்தவனே, நீலகண்டன் போல் சிவந்த காலாக்னி போன்ற உருவன் உடையவனே, உன் கருணையைப் பெற வேண்டி மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். உயர்ந்த தேகம் படைத்தவனே. உன்னை வணங்குகிறேன் .
அகன்ற விழிகளையுடையவனே உன்னை வணங்குகிறேன்.
பயங்கரமான தோற்றம் உடையவனே, உன்னை நான் வணங்குகிறேன்.
புஷ்கல கோத்திரத்தில் பிறந்தவனே, தடித்த ரோமம் உடையவனே, உன்னை வணங்குகிறேன்.
அகன்ற தாடை உடையவனே ,ஜடாமுடி தரித்தவனே, அகன்ற கண்களும், ஒட்டிய வயிறுமாக பயங்கரமான தோற்றமுடையவனே உன்னை வணங்குகிறேன்.
சூரிய புத்திரனே, சூரியனுக்கு பயத்தை உண்டாக்கக்கூடியவனே, மெதுவாக நடப்பவனே, நீண்ட தவத்தால் வருந்திய தாகம் உடையவனே, யோகத்தில் நிலைத்து நிற்பவனே, உன்னை வணங்குகிறேன்.
ஞானக்கண் உடையவனே, கச்யப குமாரனாகிய சூரியனின் புத்திரனே, உன்னை வணங்குகிறேன்.
சனி பகவானே, நீ கருணை காட்டினால் உன்னுடைய அன்புக்கு பாத்திரமான மனிதன் மகாராஜனாகிறன். யானை, சேனை,படைகளும் அந்தஸ்தும் பெறுகிறான். அதேபோல் உன்னுடைய கோபத்திற்கு ஆளாபவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்கணமே எல்லாவற்றையும் இழந்து பரம தரித்திரனாகி விடுகிறான்.
ஹே சனி பகவானே, யாராக இருந்தாலும் அவர்கள் மேல் உன் பார்வை பட்டுவிட்டால் அவர்கள் வேரோடு அழிந்து போகிறார்கள்.
ஆகையால் நீ அனுக்கிரஹ மூர்த்தியாக கருணைக்கண் கொண்டே நீ பார்க்க வேண்டும்.
யாரையும் கோபப்பார்வை பார்க்க வேண்டாம்.
உன்னைத் தொழுது சேவை செய்கின்ற பாக்கியத்தை அளிக்க வேண்டும் என்று தசரதன் பிரார்த்தனை செய்தான்.
மஹா பகவானும்,பயங்கரமனவனும்,கிரகங்களுக்கு அரசனுமான சனிபகவான் இந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக ,
"ஏ ராஜேந்திரா, உன்னிடம் நான் மிகவும் பிரியமுள்ளவனாகி விட்டேன் உன்னுடைய ஸ்தோத்திரம் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியளிக்கிறது. உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன்" என்றார் .
அதைக் கேட்ட தசரதன் , "ஏ செளரி, இன்று முதல் யாருக்கும் துன்பம் அளிக்கக்கூடாது. தேவர்,அசுரர்,மனிதரானாலும்,பறவைகள்,விலங்குகள்,ஊர்ந்து செல்லும் ஜந்துக்களானாலும் எவர்க்கும் தீங்கு செய்யலாகாது என்றார் .
அதைக் கேட்ட சனிபகவான், ஹே ராஜனே, நீ கேட்ட வரம் சரியானது தான். ஆனால், ஒரு நிபந்தனை: *நீ இப்போது கூறிய ஸ்தோத்திரத்தை படிப்பவர் யாரானாலும் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தடவையேனும் பாராயணம் செய்து வருபவர் எவரானாலும் அவர் அக்கணமே என்னால் உண்டாகும் பீடைகளிளிருந்து விடுபடுவார். மற்ற கிரகணங்களால் ஏற்படும் தீங்கிலிருந்தும் நான் காப்பாற்றுகிறேன். இது ஸத்தியம்.* என்று சனீஸ்வர பகவான் அருளிச் செய்துள்ளார்.
நாமும் இதனை த்யானம் செய்து சனீஸ்வர பகவானின் அருள் பெற்றுய்வோம்.

 

Comments

Popular posts from this blog

ஜோதிட உலகத்தில் இருக்கும் "வக்ர கிரகங்கள்" பற்றிய மிக முக்கியமான தகவல்கள்..?

  தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.. ★"வக்ர கிரகங்கள்" என்பது நமது ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 5,6,7,8 பாவங்களில் "செவ்வாய், சனி, குரு"இந்த கிரகங்கள் இருந்தால் வக்ரமாக கருதப்படுகிறது. ★சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் 40 டிகிரி இடைவெளி இருந்தால் சுக்கிரன் வக்கரமாகவும், ★சூரியனுக்கும் புதனுக்கும் இடையில் 17 டிகிரி இடைவெளி இருந்தால் புதன் வக்கிரமாகவும் கருதப்படுகிறது. ★வக்கிரமான கிரகங்கள் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சார்ந்த விஷயத்தில் நமக்கு விசித்திரமான, வித்தியாசமான, மாற்று சிந்தனை உடைய, நடைமுறைக்கு ஒத்துவராத, வழக்கத்திற்கு மாறான முறையில் நம் மனதில் தோற்றுவிக்கும் மற்றும் நம்மை வழி நடத்தும். ★உதாரணமாக 4ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் வீடு வண்டி, வாகனம், சொத்து, property போன்றவற்றில் நம்மை விசித்திரமாக,வித்தியாசமாக, மாற்று சிந்தனை உடையதாக நம்மை வழி நடத்தும். ★10ம் பாவத்தில் வக்கிரமான கிரகம் இருந்தால் விசித்திரமான தொழில் வித்தியாசமான தொழில் மாற்று சிந்தனை உடைய தொழில், எல்லோரும் ஒரு மாதிரி தொழில் செய்தால் இவர் அதற்கு நேர்மாறாக ...

*பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!*

  *பத்து பொருத்தங்களும் அதன் பயன்களும்..!!* 1. தினப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். 2. கணப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் மங்களம் உண்டு. 3. மகேந்திரப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் விருத்தியாகும். 4. ஸ்த்ரீ தீர்க்கம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்க முடியும். சொத்துக்கள் முதலில் தங்கும். 5. யோனி கூடம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவியின் தாம்பத்தியம் ருசிக்கும். 6. ராசிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தி அடைந்து செழிக்கும். 7. ராசி அதிபதிப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கரு சீக்கிரத்தில் உண்டாகும். 8. வசியப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பார்கள். 9. ரஜ்ஜுப் பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் கடைசி வரை பெண் சுமங்கலியாக இருப்பாள். 10. வேதை பொருத்தம் - இந்தப் பொருத்தம் இருந்தால் தான் தம்பதிகளுக்கு பெரிய துக்கங்கள் வராமல் காக்கும்.
  *தினமும் வளரும் அதிசய நந்தி கோவில்.* பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக உள்ளது ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்திய நாட்டில் லட்சக்கணக்கில் கோவில்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான பல கோவில்கள் அதிசயத்தக்க சிறப்பம்சங்களும், வரலாறு பின்னனின் கொண்டதாக இருக்கின்றன. அப்படிப்பட்ட பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு கோவிலாக ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். இந்த பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இருக்கும் நந்தி சிலையின் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தொல்பொருள் ஆய்வுத் துறையும்கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். ​கோவிலின் வரலாறு இந்த கோவில் வைணவ மரபுகளின்படி கட்டப்பட்டுள்ளது. இது 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்க வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரிஹர் புக்க ராய் என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவில் ஐதராபாத்தில் இருந்து 308 கி.மீ தொலைவிலும், விஜயவாடாவிலிருந்து 359 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பண்டைய கால பல்லவர்கள், சோழர்...